வெள்ளி, 25 அக்டோபர், 2013

தங்கையின் காதலனின் ஆண் உறுப்பை அறுத்த அண்ணன் ! இந்த அண்ணன்மாரின் இருண்ட பக்கங்களை கொஞ்சம் ஆராய வேண்டும் !

பேராவூரணி:தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சின்னதெற்கு காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவா. புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பாடி கிராமத்தில் விஏஓ. இதே கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28). திருச்சிற்றம்பலம் கிராமத்தில் கிராம உதவியாளர். சத்தியமூர்த்தியும், விஏஓ சிவாவின் தங்கையும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். நர்சிங் படித்துள்ள அந்த பெண், வெளிநாடு சென்று வேலை பார்த்து வருகிறார். சத்தியமூர்த்தியுடன் போனில் பேசி காதலை வளர்த்து வந்தார். இந்நிலையில், தங்கைக்கு திருமணம் செய்வதற்கு சிவா ஏற்பாடு செய்து வந்தார். இதுபற்றி சத்தியமூர்த்தி, காதலிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர் விரைவில் ஊருக்கு வருவதாகவும், அப்போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் காதலனிடம் கூறியுள்ளார். மேலும் திருமண செலவுகளுக்காக பணமும் அனுப்பி உள்ளார். இதுபற்றி சிவாவுக்கு தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.


சத்தியமூர்த்தியை சந்தித்து எச்சரித்தார். ஆனால் எதிர்ப்பை மீறி காதல் தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிவா, நேற்று இரவு நண்பர்கள் 2 பேருடன் புனவாசல் என்ற இடத்தில் காத்திருந்தார். அந்த வழியாக பைக்கில் வந்த சத்தியமூர்த்தியை வழிமறித்து தாக்கினர். ஆத்திரம் அடங்காத அவர்கள், சத்தியமூர்த்தியின் மர்ம உறுப்பை அறுத்தனர். அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் சிவா உள்பட 3 பேரும் ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய சத்தியமூர்த்தியை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குபதிந்து விஏஓ சிவா உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். -.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக