திங்கள், 14 அக்டோபர், 2013

TATA வின் ஜாகுவார் சீனாவில் 46% விற்பனை உயர்வு ! சாதனை!

டெல்லி: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், அதன் உலக விற்பனை இந்தவருட செப்டம்பர் மாதத்தில் மட்டும் 17 % உயர்வை அடைந்து 43,181 யுனிடுகளாக இருக்கின்றது எனக் தெரிவித்தது. நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஜாகுவார் லாண்ட் ரோவரின் செப்டம்பர் மாத விற்பனை அதிகரித்துள்ளது என்றும், அவை சீனா மண்டலத்தில் 46% உயர்வு, வடஅமெரிக்காவில் 6% உயர்வு, இங்கிலாந்தில் 11% உயர்வு, ஆசிய பசிபிக்கில் 29% உயர்வு ,மற்றும் இதர கடல் கடந்த சந்தைகளில் 15% உயர்வை அடைந்துள்ளது என்று தெரிவிக்கின்றது. செப்டம்பர் மாதத்தில், ஜாகுவார் 8,462 யூனிட்டுகளை விற்றுள்ளது. XF டிரைவேடிவ்களின் அதிக தேவைப்பாட்டின் எதிரொலியாக 35 % உயர்ந்துள்ளது. மேலும். JLR அவர்கள், லாண்ட் ரோவர் 34,719 யூனிட்டுகளை விற்பனை செய்து, 13% உயர்ந்துள்ளது என்பதையும் கூறினார். 
மகிழ்ச்சியில் ஜாகுவார் லாண்ட் ரோவர்.. செயல்திறன் பற்றி விளக்கும்பொழுது, ஜாகுவார் லாண்ட் ரோவரின் விற்பனை செயற்குழு நிர்வாகி ஆண்டி கோஸ் அவர்கள் கூறியது, "எல்லா இடங்களிலும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளதால் இது ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவருக்கு இன்னொரு பதிவு மாதம்." செப்டம்பர் மாதத்தில் XF டிரைவேடிவ்கள் அதிக விற்பனையை பதிவு செய்தது. ஸ்போர்ட்பிரேக் மற்றம் உயர்த்தப்பட்ட என்ஜின் லைன்-அப் ஆகியவற்றின் அறிமுக செய்த குழுவிற்கு தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும், XJ டிரைவேடிவ் சீனா மற்றும் வடஅமெரிக்காவிலும் நன்கு செயல்படுவதாக கூறினார்.
tamil.goodreturns.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக