ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நெய் மணம் கமழும் புதிய ரக மிளகாய் Hybrid green chilly smells like ghee

 A hybrid variety of chilly that emits ghee flavour when cooked has been developed by Srilakshmi, under the
guidance of her father Padmasree T Venkatapathy Reddiar.
Using Gamma radiation, the new hybrid variety has been developed through cross breeding a Sri Lankan variety of green chilly with Sivakasi variety of green chilly in the Lakshmi Narayana Hybrid Crossandra Innovation Centre at Koodapakkam, said Srilakshmi.
On an occasional visit to forest near Munnar, this chilly was noticed by Venkatapathy Reddiar and after finding that it smells like ghee, he brought it to Puducherry. After cooking in food and feeding it to animals and then by the own family, it was ascertained that the chilly is edible. Then on experimentation by crossbreeding with pungent chillies, this new hybrid variety was developed.
புதுச்சேரியை சேர்ந்த விவசாயி வேங்கடபதி. இவர் அதிகளவில் பூக்கும் கனகாம்பரம் செடியை ஒட்டு முறையில் உருவாக்கியுள்ளார். இதேபோல் காமா கதிர்வீச்சை பயன்படுத்தி, அதிக மகசூல் அளிக்கும் புதிய ரக சவுக்கு கன்றுகளை உருவாக்கி உள்ளார். 4ம் வகுப்பு வரை பயின்ற வேங்கடபதியின் சாதனையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது இவரது மகள் ஸ்ரீலட்சுமி, நெய் மணம் கமழும் புதிய ரக மிளகாயை உற்பத்தி செய்துள்ளார். அதை முதல்வர் ரங்கசாமி நேற்று அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு, துணை சபாநாயகர் செல்வம், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சாந்தா, வேங்கடபதி, அவரது மனைவி விஜயாள் ஆகியோர் பங்கேற்றனர். ரங்கசாமி கூறுகையில், படிக்காத விவசாயி வேங்கடபதி விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தி புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது இவரது மகள் புதிய மிளகாயை கண்டு பிடித்துள்ளார். இதற்கு நெய் மணம் கமழும் மிளகாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தினால் சமையலில் நெய் மணம் வருவதாக பயன்படுத்தியவர்கள் கூறினர்.
இதுபோன்று மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார். புதுவை மக்களுக்கு 2 மாதங்களுக்கு நெய் மணம் கமழும் மிளகாய் இலவசமாக வழங்கப்படும் என வேங்கடபதி கூறினார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக