ஞாயிறு, 27 அக்டோபர், 2013

சிறுமிகளுக்கு சுயம்வரம்! அதிர்ச்சித் தகவல்! மேற்கு வங்கத்தில் !

கொல்கத்தா, அக். 25-  மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் பகுதியில்
பழங்குடி மக்கள் இன்னும் தங்கள் குழந் தைகளுக்கு சுயம்வரம் மூலம் திருமணம் செய்துவைக்கிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாக்கள் இந்த ஆண்டும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத் தல்கள் குறைவாக இருப்பதால் வெகு விமரிசையாக நடைபெறுகிறதாம்.
இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறித்து அப்பகுதியில் பழங்குடியினர் முன்னேற்றத் திற்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சுசேத்னா வை சேர்ந்த சுமிதா தத்தா கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமிருந்த ஜங்கல்மஹால் பகுதிகளில் வாழும் பழங்குடிமக்கள் தங்கள் பண்டிகைக்கால சுயம்வரங் களுக் குத் தயாராகி வருகின்றனர். பின்பூர் என்னு மிடத்தில் நடைபெறும் ஆர்கொன்டா படபிந்தா மேளா போன்ற சுயம்வர விழாக் களில் தங்களது 12 வயதான சிறுமிகளுக்கு திருமணம் செய்ய இவர்கள் ஒன்று கூடு கின்றனர்.
இந்த சுயம்வரங்களில் பங்கேற் கும் சிறுமிகள் யாராவது ஒருவரை கண்டிப்பாக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பது குடும்பத்தினருடைய கட்டளை. இந்த சிறுமிகளுக்கு குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பேயில்லை.
இப்படி சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் சிறுமிகள் வாழ்க்கை மிகத்துயரமானது.
இவர்கள் ஓடிவிளை யாட வேண்டிய வயதில் குடும்ப வாழ்க் கையில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு 14 வயதிலேயே குழந்தைக்கு தாயா கின்றனர். பள்ளி செல்ல வேண்டிய வயதில் வீட்டு வேலைகள் என்ற பாடத்தையே படிக்கின்றனர்.
இதனால் இவர்களுக்கு இளவயதிலேயே மிகுந்த மனஅழுத்தம் மற்றும் மனநோய்கள் ஏற்படுகின்றன. இது குடும்பவன்முறையாகும்.
அரசின் பாராமுகம் இந்த விழாக்கள் சிலடா முதல் பேல்பாஹரி வரையில் உள்ள ஊர்களில் பல இடங்களில் தொடர்ந்து நடத்தப் படுகின்றன. இந்த தீபாவளியை ஒட்டிய நாட்களில் குழந்தைத் திருமணம் செய்து தங்கள் வீட்டிற்கு ஒரு வேலைக்காரியை கொண்டு வருவது போல இவ்வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
சந்தால், லோதா, கேரி மற்றும் மகதோ மாவட்டங்களில்கூட இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இதைப்பற்றி அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. புகார் அளித்தாலும் இது பழங்குடியினர்களின் வழக்கம் அதை ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்து விடுகின்றனர்.
சட்டப்படி குற்றம் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006இன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். ஆனால் பாதிக்கப்படும் குழந்தைகள் வீட்டில் குடும்ப வன்முறையாலும், திருமண வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த குழந்தைகளே ஊட்டச்சத்தில்லாமல் இருக்கும்போது இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றன.
எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில் வருடத்திற்கு 354 குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன, குறைந்தபட்சம் 40 குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு கொண்டு செல்லப்படு கின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் உலகளவில் அதிகபட்சமாக 47 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்துள்ளது. 15 - 19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தங்கள் பிரசவநேரத்தில் இறந்துவிடுவது, குழந் தைகள் இறந்தே பிறப்பது போன்றவை வளரும் நாடுகளில் அதிகளவில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக