செவ்வாய், 15 அக்டோபர், 2013

Chnnai கூண்​டோடு வெளி​யேற்​றப்​ப​டும் குடி​சை​வா​சி​கள்: வாழ்​வா​தா​ரத்​துக்​குப் போராட்​டம்​

செம்​மஞ்​சேரி பகு​தி​யில் கட்​டப்​பட்​டுள்ள குடிசை மாற்று வாரிய குடி​யி​ருப்​பு​கள்.செம்​மஞ்​சேரி பகு​தி​யில் கட்​டப்​பட்​டுள்ள குடிசை மாற்று வாரிய குடி​யி​ருப்​பு​கள்.

சென்னை நக​ரில் இருந்து இடம் பெயர்க்​கப்​ப​டும் குடி​சை​வா​சி​கள் தங்​க​ளின் வாழ்​வா​தா​ரத்​துக்​காக போரா​டும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​
​ குடி​சைப் பகு​தி​க​ளில் வசிக்​கும் மக்​க​ளுக்கு பாது​காப்​பான குடி​யி​ருப்​பு​கள் கட்​டித் தரு​வ​தா​கக் கூறி குடி​சை​களை அப்​பு​றப்​ப​டுத்​தி​விட்டு,​​ புறாக்​கூண்டு போன்ற அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு​க​ளில் குடி​ய​மர்த்​தப்​ப​டு​கின்​ற​னர்.​ முத​லில் இவர்​க​ளுக்கு சென்னை நக​ருக்​குள்​ளேயே குடி​யி​ருப்​பு​கள் ஒதுக்​கப்​பட்​ட​தால் எந்​த​வித சிக்​க​லும் ஏற்​ப​ட​வில்லை.​
​ ஆனால் கடந்த 10 ஆண்​டு​க​ளுக்கு முன்பு சென்​னை​யில் பல்​வேறு இடங்​க​ளில் வசித்து வந்த குடி​சைப் பகுதி மக்​களை அப்​பு​றப்​ப​டுத்​தி​விட்டு அவர்​களை கண்​ணகி நக​ரில் கட்​டப்​பட்ட அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு​க​ளில் குடி​வைத்​த​னர்.​
​ இப்​போது கண்​ணகி நகர் குடி​யி​ருப்​புப் பகு​தி​க​ளில் மட்​டும் சுமார் 18,000 குடி​யி​ருப்​பு​கள் உள்​ளன.​ இவற்​றில் சுமார் 1 லட்​சம் பேர் வசிக்​கின்​ற​னர்.​ ஆனால் இவர்​க​ளுக்கு சாலை வசதி,​​ மருத்​துவ வசதி,​​ பள்​ளி​கள் என எந்​த​வித அடிப்​படை வச​தி​க​ளும் செய்து தரப்​ப​ட​வில்லை.​ ​

​ இதே​போல செம்​மஞ்​சேரி பகு​தி​யி​லும் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு​கள் கட்​டப்​பட்டு குடி​சைப்​ப​குதி மக்​கள் குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர்.​ இந்த இரண்டு பகு​தி​க​ளில் வசிக்​கும் மக்​க​ளும் அடிப்​படை வச​தி​கள் இல்​லா​மல் அவ​திப்​பட்டு வரு​கி​றார்​கள்.​ மேலும் இவை சோழிங்​க​நல்​லூர் மண்​ட​லத்​தில் சென்னை மாந​க​ராட்​சி​யின் எல்​லைக்கு அப்​பால் இருந்​தன.​ இப்​போ​து​தான் இவை சென்​னை​யு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன.​
​ அதன்​பி​றகே சாலை வசதி ஓர​ள​வுக்கு செய்து தரப்​பட்​டுள்​ளது.​ ஆனா​லும் இதர வச​தி​கள் எது​வும் இங்கே இல்லை.​
​ ​ மேலும் குடி​யி​ருப்​பு​களை ஒதுக்​கு​வ​தி​லும் முறை​கே​டு​கள் நடை​பெ​று​கின்​றன.​ அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு வேண்​டப்​பட்​ட​வர்​க​ளுக்கு விதி​க​ளுக்கு மாறாக பல குடி​யி​ருப்​பு​கள் ஒதுக்​கப்​ப​டு​கின்​றன.​
​ ​ வாழ்​வா​தா​ரம் இல்லை:​​ குடி​சைப் பகு​தி​க​ளில் வசித்த பெரும்​பா​லா​னோர் ஏழை தலித் மக்​கள்.​ இவர்​கள் அனை​வ​ரும் உட​லு​ழைப்​புத் தொழி​லா​ளி​கள்.​ சென்னை நக​ருக்​குள் இருந்​த​போது,​​ அரு​கி​லேயே கட்​ட​டப் பணி​கள் போன்ற கூலி வேலை​க​ளுக்கு சென்று வந்​த​னர்.​
​ ஆனால் இப்​போது சென்னை நக​ருக்கு வெளியே சுமார் 25 கி.மீ.​ தொலை​வுக்கு அப்​பால் இவர்​கள் குடி​ய​மர்த்​தப்​பட்​டுள்​ள​தால்,​​ வேலை​யில்​லா​மல் திண்​டாடி வரு​கி​றார்​கள்.​ பலர் தின​மும் சென்​னைக்கு வந்து செல்​கின்​ற​னர்.​ இவர்​கள் சம்​பா​திக்​கும் ஊதி​யத்​தில் பெரும்​ப​குதி பய​ணச் செல​வு​க​ளுக்கே போய் விடு​கி​றது.​ இதில் பெண்​க​ளின் நிலை மிக​வும் மோச​மாக உள்​ளது.​ ​ இப்​போது பலர் வேலைக்கு செல்​வ​தில்லை.​ வாழ்க்​கையை சமா​ளிக்க பலர் தவ​றான வழி​க​ளில் செல்​கின்​ற​னர் என்று சமூக ஆர்​வ​லர்​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​
​ தொட​ரும் வெளி​யேற்​றம்:​​ இந்த நிலை​யில் திரு​வல்​லிக்​கேணி பகு​தி​யில் உள்ள அனு​மந்​த​பு​ரம்,​​ சிவ​ராஜ்​பு​ரம்,​​ மாட்​டாங்​குப்​பம் ​ "மெரினா' கெனால் தெரு,​​ விக்​டோ​ரியா நகர்,​​ லாக் நகர்,​​ காந்தி நகர்,​​ பல்​ல​வன் குடி​யி​ருப்பு,​​ நெடுஞ்​செ​ழி​யன் காலனி,​​ ஐந்து குடிசை,​​ அம்​மா​ந​கர்,​​ மேற்கு கூவம் சாலை,​​ பூதப்​பெ​ரு​மாள் கோயில் தெரு,​​ புதுப்​பேட்டை தெற்கு கூவம் தெரு உள்​ளிட்ட குடி​சைப் பகு​தி​க​ளில் வாழும் மக்​க​ளுக்கு அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு​கள் கட்​டித் தரு​வ​தா​கக் கூறி டோக்​கன்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.​
​ ஆனால் எந்த இடத்​தில் குடி​யி​ருப்​பு​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன என்ற விவ​ரம் இவர்​க​ளுக்கு இது​வரை தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​
​ இத​னை​ய​டுத்து சென்​னை​யில் இருந்து வெளி​யேற்​றா​மல்,​​ அதே பகு​தி​யில் குடி​யி​ருப்​பு​களை கட்​டித் தர​வேண்​டும் என்று கோரி அந்த பகுதி மக்​கள் அண்​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ சென்​னைக்கு வெளியே குடி​யி​ருப்​பு​கள் தரப்​பட்​டால் தங்​க​ளு​டைய வாழ்​வா​தா​ரம் முற்​றி​லு​மாக பாதிக்​கப்​ப​டும்;​ எனவே அரசு,​​ உரிய மாற்று வழி​களை ஏற்​ப​டுத்​தித் தர வேண்​டும் என்​பதே இவர்​க​ளது முறை​யீடு.​
​1 லட்​சம் பேருக்கு மருத்​து​வ​மனை இல்லை
கண்​ணகி நகர் பகு​தி​யில் சுமார் 1 லட்​சம் பேர் வசிக்​கின்​ற​னர்.​ ஆனால் இவர்​க​ளுக்கு அனைத்து வச​தி​க​ளு​டன் கூடிய அரசு மருத்​து​வ​ம​னை​கள் எது​வும் இல்லை.​ தனி​யார் மருத்​து​வ​ம​னை​கள் மட்​டுமே உள்​ளன.​
​ செம்​மஞ்​சே​ரி​யில் மட்​டும் ஒரே​யொரு மகப்​பேறு மருத்​து​வ​மனை உள்​ளது.​ ஆனால் 50 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் வசிக்​கும் அந்த பகு​தி​யில் ஒரு அர​சுப் பள்ளி கூட இல்லை.​
​ கண்​ணகி நகர் பகு​தி​யில் 2 அர​சுப் பள்​ளி​கள் மட்​டுமே உள்​ளன.​ ஆனால் அதில் ஒன்​றில் மட்​டுமே பிளஸ் 2 வரை உள்​ளது.​
 சமூ​க​ந​லக் கூடம் ஆக்​கி​ர​மிப்பு
கண்​ணகி நகர் பகு​தி​யில் சிறி​ய​தாக ஒரு சமூ​க​ந​லக் கூடம் மட்​டுமே இருந்​தது.​ ஆனால் அதை​யும் காவல்​து​றை​யி​னர் ஆக்​கி​ர​மித்து காவல்​நி​லை​யம் அமைத்​துள்​ள​னர்.​
​ இங்​குள்​ள​வர்​கள் வீட்டு நிகழ்ச்​சி​களை கொண்​டாட வேண்​டு​மென்​றால் தெரு​வில் கொண்​டு​கி​றார்​கள்.​ செம்​மஞ்​சே​ரி​யில் அது கூட இல்லை.​ ​​ விளை​யாட்​டுத் திடல்,​​ நூல​கம்,​​ உடற்​ப​யிற்சி கூடம் போன்ற வச​தி​க​ளும் இங்கு இல்லை.​
​ சென்​னை​யின் வளர்ச்​சிக்​காக பாடு​பட்​ட​வர்​கள் நாங்​கள்.​ ஆனால் எங்​க​ளுக்கு சென்​னை​யில் இடம் இல்லை என்று ஆதங்​கத்தை வெளிப்​ப​டுத்​து​கின்​ற​னர் கண்​ணகி நகர் மக்​கள்.​ தினமணி,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக