செவ்வாய், 15 அக்டோபர், 2013

பாய்லின் புயல் – இந்திய வரலாற்றில் மிக மோசமான மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிஷா ஆகிய
மாநிலங்களை தாக்கியது. காலநிலை முன்னெச்சரிக்கை காரணமாக, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதில், உயிர்ச் சேதம் பெரிதும் தவிர்க்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் காலநிலை காரணமான மிக மோசமான மக்கள் வெளியேற்றம் (Worst evacuation history in India) இதுதான் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்ட போதிலும், ஒடிசாவில் மட்டும் குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்தனர். 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில்.

இது தவிர இந்த பாய்லின் புயலால் 5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.2,400 கோடி மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில், 12 மாவட்டங்களில் உள்ள 14,514 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புயலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர்.
மேற்கு வங்க கடற்பகுதி அருகே இரும்பு தாது ஏற்றி வந்த பனாமா நாட்டு சரக்கு கப்பல் எம்.வி. பிங்கோ புயல் மற்றும் மோசமான அலைகள் காரணமாக கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் இல்லை, கப்பலில் இருந்த மாலுமிகள் தப்பித்து விட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்த புயலை வைத்து அரசியல் செய்யவும், காங்கிரஸ் கட்சி தவறவில்லை.
காங்கிரஸின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவே, பாய்லின் புயலால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்று அக்கட்சி தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மிகத் தீவிரமான புயல், முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கப்பட்டது. புயல் மையம் கொண்டது, கரையைக் கடப்பது உள்ளிட்ட அனைத்தும் மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டன. மத்திய அரசின் கணிப்பின் காரணமாக, மிகச் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரிய எண்ணிக்கையில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதற்கு, நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம்” என்றார்.
புயல் அடித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் சிலவற்றை தொகுத்து தந்திருக்கிறோம். போட்டோக்களுக்கான லிங்க், கீழேயுள்ளது:
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக