ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஏலே, அந்த புள்ளைய நடிக்க விட மாட்டியா?: நடிகரை விளாசிய நடிகை ! வம்புவின் தொல்லை

சென்னை: தனது கணவர் எடுக்கும் படத்தின் நாயகியின் காதலரை நடிகை ஒருவர் விளாசித் தள்ளிவிட்டாராம். சுந்தரமான இயக்குனர் கொழுக் மொழுக் நடிகையை மீண்டும் தனது படத்தில் நாயகியாக்கியுள்ளார். படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனரின் நடிகை மனைவி ஹீரோயினுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளாராம். ஹீரோயினின் காதலரான விரல் வித்தை நடிகர் படப்பிடிப்புக்கு வரவே கூடாது. அடிக்கடி போனில் பேசக் கூடாது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிட வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ளாராம் இயக்குனரின் மனைவி. இதற்கு ஹீரோயினும் ஓகே சொல்லியுள்ளார். ஒரு நாள் படிப்பிடிப்பின்போது விரல் வித்தை நடிகர் தனது காதலிக்கு எஸ்.எம்.எஸ். மேல் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். இதை கண்டுபிடித்துவிட்ட இயக்குனரின் மனைவி நடிகருக்கு போன் போட்டு விளாசித் தள்ளிவிட்டாராம்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக