ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நயன்தாரா தீபாவளிக்கு வருகிறார் 4 ஆண்டு இளமையுடன்! ஆனால் டப்பிங்காமே ?

ராஜா ராணி படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்த உடனே, நம்ம
தயாரிப்பாளர்கள் வரிசை கட்டிக்கொண்டு யார் வீட்டு கதவை தட்ட
முயன்றார்கள் என்பதில் இரண்டாம் ஊகம் தேவையில்லை. ஆர்யா விட்டு காலிங் பெல்லைவிட, நயன்தாரா வீட்டு காலிங் பெல்தான் பிசி.
ஆனால், நயன்தாராதான் பிடி கொடுப்பதாக இல்லை.
டைரக்டர் ஒருவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம், நயன்தாராவின் தற்போதைய மார்க்கெட் ரேட்டைவிட 20 சதவீதம் அதிகம் கொடுப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. ”ஊகும் சான்சே இல்லை” என்று பதில் வந்ததாம்.
‘ராஜா ராணி’ சூட்டோடு சூட்டாக மற்றொரு நயன்தாரா படம் திரைக்கு வந்தால், வசூலை அள்ளலாம் என்ற கோடம்பாக்கம் நம்பிக்கையை, நயன்தாரா நிராகரிப்பு வெறுப்பேற்றி விட்டதில், ரூம் போட்டு யோசித்த நமது ஆட்களுக்கு தோன்றிய விசித்திரமான யோசனை, நயன்தாரா படம் ஒன்றை சுடச்சுட தமிழில் டப் பண்ணி விடலாமே என்பதுதான்.
அதுவரைக்கும் சரியான பிசினெஸ் திங்கிங்தான்.
ஆனால், டப் பண்ணவும் படம் கிடைக்கணுமே..

நயன்தாராவின் சமீபகால தெலுங்கு படங்கள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ஸ்ட்ரிங் அட்டாச்ட் ஆக இருக்க, பிரிமியர் பிலிம்ஸ் நிறுவனம் ‘ஆஞ்சநேயலு’ என்ற தெலுங்கு படத்தை டப் பண்ண தொடங்கி, ஜெட் வேகத்தில் காரியங்கள் நடக்கின்றன.
‘ஆஞ்சநேயலு’, ரிப்போர்ட்டர் என்ற பெயரில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
ரவி தேஜா, நயன்தாரா நடித்த இந்த ‘ஆஞ்சநேயலு’ ஆந்திராவில் வெற்றி பெற்ற படம் என்பது உண்மைதான். ஆனால், படம் வெளியானது எப்போது தெரியுமா? 2009-ம் ஆண்டு!
4 ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தை தூசு தட்டி எடுத்து இப்போது நயன்தாராவுக்காக ஓட வைக்க முடியுமா?
இந்த 4 ஆண்டுகளில் தமிழ் படங்களின் ட்ரென்ட் மாறிவிட்டது. அப்படியிருந்தும் என்ன தைரியத்தில் இந்த படத்தை (மசாலா படம்தான்) தீபாவளி ரேஸில் களத்தில் இறக்குகிறார்கள்?
இந்தக் கேள்விக்கு பதிலாக லேசாக ஒரு சிரிப்பு சிரிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில்.
காரணம், எந்த ட்ரென்டிலும் சிக்கிக் கொள்ளாத ஒரு விஷயம் உள்ளதாம் ‘ஆஞ்சநேயலு’வில்! அது என்னவென்றால், அந்த நாட்களில் நயன்தாரா அதீத கவர்ச்சி காட்டி நடித்த படம் இதுவாம்.
“தமிழ் பட ட்ரென்ட் மாறினால் என்ன.. நயன்தாரா ஸ்பெஷல் இது.. அதுவும் தற்போது உள்ளதைவிட 4 ஆண்டு இளமையுடன்” என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர் பரவசமாக!
அடடா.. நம்ம ஆட்களுக்கு எங்கே கனெக்ஷன் கொடுத்தால், எங்கே ஷாக் அடிக்கும் என்று சொல்லியும் கொடுக்க வேண்டுமா? ‘ஆஞ்சநேயலு’ என்கிற ரிப்போர்ட்டரில் இருந்து சில ஸ்டில்களை கொடுக்கிறோம். நீங்களே பார்த்து, தீபாவளியை நயன்தாராவுடன் கொண்டாடுவது பற்றி முடிவெடுங்களேன்
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக