புதன், 16 அக்டோபர், 2013

பஞ்சாப் மாணவியை அவுஸ்த்ரேலியாவில் காணவில்லை !

Natasha Narang
TASMANIA Police are concerned for the welfare of missing Mowbray woman Natasha Narang.
Ms Narang, 30, was last seen in Plumer St, Mowbray, about 1.45pm on Friday.
Ms Narang, who is of Indian descent, is about 165cm tall, with a medium build, long black hair and olive skin.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடாஷா நரங்(30) என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள்’ என்ற தலைப்பில் முனைவருக்கான (பி.எச்.டி) ஆராய்ச்சி படிப்பில் ஈடுப்பட்டிருந்தார். தனது கணவருடன் டாஸ்மானியாவில் தங்கி படித்துவந்த அவரை கடந்த 4ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், டாஸ்மானியாவில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் நடாஷா நரங்கின் சில உடமைகளை போலீசார் கண்டு பிடித்தனர். இதனையடுதது, மீட்பு படையினர் மூலம் ஆற்றில் முழ்கியும், ஷெலிகாப்டரில் பறந்தபடியும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் நேற்று வரை அவரைப் பற்றி எந்த புதிய தகவலும கிடைக்கவில்லை.

படிப்பு சார்ந்த மன அழுத்தம் காரணமாக எங்காவது ஓய்வெடுப்பதற்காக அவர் தனிமையை நாடி சென்றிருக்கலாம் என டாஸ்மானியாவில் வசிக்கும் சில சீக்கியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் athirady.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக