புதன், 9 அக்டோபர், 2013

சம்பளத்தில் ஹீரோக்களை ஓவர்டேக் செய்யும் இயக்குனர்கள்

அதிக சம்பளம் பெறுவதில் ஸ்டார் ஹீரோக்களையே இயக்குனர்கள்
ஓவர்டேக் செய்து வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் கை ஓங்கி இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ஹீரோக்கள் தலையீடுதான் அதிகம், அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு, சம்பள விஷயத்திலும் அவர்களை மிஞ்ச ஆளில்லை என¢றெல்லாம் வழக்கம்போல் சொல்லலாம். ஆனால் அந்த நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சம்பள விஷயத்தில் டாப் ஹீரோக்களையே சில இயக்குனர்கள் ஓரம்கட்டி வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர் ஷங்கர். எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷங்கரின் மார்க்கெட் வேல்யூ எகிறியது. இப்போது சம்பளம் மட்டுமில்லாமல் லாபத்தில் பங்கு என ஸ¢டார் ஹீரோக்களை போல் பெறுகிறார் ஷங்கர். தென்னிந்திய சினிமாவில் லாபத்தில் பங்கு பெறும் முதல் இயக்குனர் இவர்தான். நண்பன் படத்துக்காக அப்பட ஹீரோவான விஜய்க்கு இணையான சம்பளத்தை இவர் பெற்றார். கிட்டத்தட்ட ரூ.11 கோடி இவர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இப்போது இயக்கி வரும் படத்திலோ அதுக்கு ஒருபடி மேல்போய், அந்த பட ஹீரோவைவிட அதிகம் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.


இரண்டாம் இடத்தில் இருப்பவர் பிரபுதேவா. இந்தியில் ஒரே ஹிட் மூலம் பிரபலமாகி, ரெண்டாவது படத்தின் ஹிட் மூலம் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். காரணம், இவரது இரண்டாவது ஹிட் படம், ரூ.100 கோடி பிசினஸ் செய்ததுதான். இப்போது ஒரு படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் பெறுகிறார் பிரபுதேவா. தமிழில் சில ஸ்டார் ஹீரோக்கள் கூட இந்த சம்பளத்தை இன்னும் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இடம் முருகதாசுக்கு. இந்தி கஜினி ஹிட்டுக்கு பிறகு ரூ.10 கோடி கேட்டு தயாரிப்பாளர்களை மிரள வைத்த£ர். அப்போது பலர் அந்த சம்பளம் தர தயங்கினர். ஆனால் இப்போது ரூ.15 கோடியும் அதற்கு மேலும் இவருக்கு சம்பளம் தர பாலிவுட் தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். காரணம், ரூ.100 கோடி பிசினஸ் அங்கு சர்வசாதாரணமாகிவிட்டது. துப்பாக்கி இந்தி பட ரீமேக்கிற்காக ரூ.15 கோடி இவருக்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இயக்கி வரும் படங்கள் ஹிட் ஆகிவிட்டால், அடுத்த வருடத்தில் இந்த இயக்குனர்களின் சம்பளம் ரூ.20 கோடியை தொடும் என்றும் திரையுலகினர் கூறுகின்றனர். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக