புதன், 9 அக்டோபர், 2013

நடிகர்களுக்கு தந்த சம்பளத்துக்கு வரி செலுத்தவில்லை லிங்குசாமி! - சோதனை தொடர்கிறது

சென்னை: நடிகர் நடிகைகளுக்கு தந்த சம்பளத்துக்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி வரி செலுத்தாததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இன்றும் லிங்குசாமி அலுவலகங்கள், வீடுகளில் சோதனை தொடர்கிறது. இயக்குநர் லிங்குசாமி, தன் சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து படங்களையும் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்தது இவர்கள் நிறுவனம்தான். இந்த ஆண்டும் ஒரே நேரத்தில் 6 படங்களைத் தயாரித்து வருகிறார். இவற்றில் கமல், சூர்யா நடிக்கும் படங்களும் அடங்கும். நேற்று முன் தினம் மட்டும் இவர் தயாரிக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அவை, கமல் நடிக்கும் உத்தம வில்லன், சூர்யா நடிக்கும் படம் மற்றும் கோலிசோடா போன்றவையாகும். இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து வருமான வரி அதிகாரிகள் லிங்குசாமி அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அதிகாரிகள் அனைவரும் டெல்லியிலிருந்து வந்திருந்தனர். நேற்று இரவு முழுவதும் விடிவிடிய இந்த சோதனை நடந்தது. அப்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையில், பல கோடி ரூபாய்க்கு லிங்குசாமி வரி கட்டாதது தெரிய வந்துள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு சந்த சம்பளம் மற்றும் முன் பணத்துக்கு வரியே கட்டவில்லையாம் லிங்குசாமி. மேலும் படத்தயாரிப்புக்கென செலவழித்த தொகை குறித்து முறையான கணக்கு வழக்குகள் இல்லாததையும் பார்த்த அதிகாரிகள், இன்றும் சோதனையைத் தொடர்கின்றனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக