வியாழன், 17 அக்டோபர், 2013

அழகிரி: கட்சியில் புதிய பதவி எதுவும் கேட்கப் போவதில்லை

சென்னை: கட்சியில் புதிய பதவி எதுவும் கேட்கப் போவதில்லை என்று திமுக தென்மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தென்மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு, கேள்வி: ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று நினைக்கிறீர்கள்? பதில்: வெளிநாட்டில் இருந்து தற்போது தான் வந்துள்ளேன். வந்ததும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்களே? கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா? பதில்: கட்சி தலைமை கேட்டுக் கொண்டால் செய்வேன். கேள்வி: திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் உங்களுக்கு புதிய பதவி எதுவும் கேட்பீர்களா? பதில்: புதிய பதவி எதுவும் கேட்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக