வியாழன், 17 அக்டோபர், 2013

தினசரி புதுப் புது பெண்கள் தேடிய சாமியார் ஆசாராம் பாபுஜி ! ஒரே பெண்ணை மீண்டும் விரும்பமாட்டாராம் !

அகமதாபாத்: சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் மீது புதுப் புதுப் புகார்களாக் கிளம்பி வருகின்றன. அவரது பெண் பலவீனம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆசாராமுக்கு தினசரி பெண்கள் வேண்டும். அதுவும் புதுப் புதுப் பெண்ணாக இருக்க வேண்டுமாம். அவரால் பெண் துணை இல்லாமல் இருக்க முடியாதாம். இப்படி ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் ஒரு பெண்ணை மட்டும் பலாத்காரம் செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பல பெண்களை அவர் கட்டாயப்படுத்தி சீரழித்திருக்கலாம் என்றும் இந்தத் தகவல் கூறுகிறது. இந்தத் தகவல்களை 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆசாராமால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்துள்ளார். இவர் ஆசாராம் மீதும், அவரது மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் பலாத்காரப் புகார் கூறியுள்ளார். இவரது சகோதரியும் இவர்களால் பாதிக்கப்பட்டதாகவும் இவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது...
ஆசாராமுக்கு இளம் பெண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் அவர் இளம் பெண்களைத்தான் தேடுவார்
தினசரி அவருக்குப் புதிது புதிதாக பெண்கள் வேண்டும். ஒரே பெண்ணை அவர் மீண்டும் மீண்டும் விரும்ப மாட்டார். தினசரி பெண்கள் கேட்பார்

இளம் பெண்களை தனது சபலத்திற்கு வீழ்த்த அவர் பல தந்திரங்களைக் கடைப்பிடிப்பார். இதற்காக அவர் பல செயல்களையும் கச்சிதமாக செய்வார்.
நான் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளேன். 1998ம் ஆண்டு சூரத்தில் நடந்த ஆன்மீகக் கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அங்கு எனக்கு ஆசாராம் ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்தார். ஆப்பிளும் கொடுத்தார். பின்னர் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார், என்னை வந்து சந்தி என்று கூறிச் சென்றார்
பின்னர் நான் ஆசாராமின் ஆன்மீக முகாமில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு என்னை அணுகிய அவரது பக்தர்கள் சிலர், இந்த ஆப்பிள் விசேஷமானது, இதை யாருக்கும் தராதே, நீயே சாப்பிடு என்றனர்.
அப்போது தேல் என்ற பிரசாகர் என்னிடம், உன்னை ஆசிரமத்தின் சிறப்புப் போதனையாளராக்க ஆசாராம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் சூரத்தில் நடந்த இன்னொரு கூட்டத்தில் நானும் எனது தாயாரும் கலந்து கொண்டோம். அப்போது ஆசாராமின் மேலாளரான துருவ் என்பவர் என்னை, ஆசாராமின் மனைவி லட்சுமியிடம் அழைத்துச் சென்றார். லட்சுமி, என்னையும், எனது தாயாரையும் ஊருக்குப் போக வேண்டாம் என்று கூறி தடுத்து நிறுத்தினார். பின்னர் என்னை மட்டும் அகமதாபாத்துக்கு அழைத்துச் செல்லப் பணித்தார். நான் அங்கு கொண்டு செல்லப்பட்டேன்
2001ம் ஆண்டு தேல் மற்றும் வக்லோ ஆகிய இருவரும் என்னையும், என்னைப் போல 10 இளம் பெண்களையும் ஆசாராமின் பண்ணை இல்லமான சாந்தி வாதிகாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னையும் இன்னொரு பெண்ணையும் தேர்வு செய்த ஆசாராம், எங்களை போதனையாளர்களாக்குவதாக அறிவித்தார். மேலும் பயிற்சியும் அளிக்கப் போவதாக தெரிவித்தார்
பின்னர் ஆசாராமின் மகள் பார்தி ஒரு நாள் எங்களிடம் வந்து, என்னையும், இன்னொரு பெண்ணையும் ஆசாராம் தனது பண்ணை இல்லத்துக்கு அழைப்பதாக கூட்டி் சென்றார்
அங்கு எங்களை ஒவ்வொருவராக அறைக்குள் வருமாறு ஆசாராம் கூறினார். முதலில் அந்தப் பெண் சென்றார். 10 நிமிடம் கழித்துத் திரும்பினார். பின்னர் என்னை வரச் சொன்னார். நான் போனேன்
நான் உள்ளே போனபோது படுக்கையில் உட்கார்ந்திருந்தார் ஆசாராம். உள்ளே வந்த என்னிடம் நெய்யைக் கொடுத்து தலையில் தடவி மசாஜ் செய்யுமாறு கூறினார். நான் மசாஜ் செய்ய ஆரம்பித்தபோது அவர் எனது உடலில் கை வைத்து விளையாடத் தொடங்கினார். இதை நான் விரும்பவில்லை. இப்படிச் செய்யாதீர்கள் என்று ஆசாராமிடம் நான் கூறினேன். அதற்கு அவர், நீ ஒரு பெரும் போதனையாளராக வரப் போகிறாய். அதற்கு முன்பு இந்த சாதாரண லெளகீக வாழ்க்கையிலிருந்து நீ விடுபடவேண்டும் என்றார்
அதைக் கேட்டு நான் மேலும் பயந்தேன். என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். அதற்கு அவர் கோபமடைந்தார். என்னை படுக்கையில் முரட்டுத்தனமாக தள்ளினார். பின்னர் எனது சல்வாரைப் பிடித்து இழுத்துக் கிழித்தார். நான் தப்பி ஓட முயன்றேன். ஆனால் என்னைப் பின்னாலிருந்து பிடித்து படுக்கையில் தள்ளினார்
பின்னர் என்னிடம், நீ எவ்வளவுதான் தப்பி ஓட முயன்றாலும் உன்னை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று கூறி என்னை ஓரல் செக்ஸில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். பின்னர் அவரே அதைச் செய்ய வைத்தார். எனக்கு ரத்தம் வந்தது. மிகுந்த வலியில் கதறி அழுதேன்
அப்படியும் அவர் என்னை விடவில்லை. எனது வெள்ளை நிற குர்தா முழுவதும் ரத்தமாக இருந்தது. என்னை பாத்ரூமுக்குப் போய் சுத்தப்படுத்திக் கொள்ளக் கூறினார் ஆசாராம்
பாத்ரூமிலிருந்து நான் திரும்பி வந்ததும், என்னைப் பார்த்து, இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லாதே. சொன்னாலும் உனக்குப் பலன் இருக்காது. நீ சொன்னால் உன்னை எரித்து சாம்பலைக் கடலில் கரைத்து விடுவேன் என்று மிரட்டி அனுப்பினார்
நான் அறையிலிருந்து வெளியே வந்தபோது கேட் அருகில் தேலும், வக்லோவும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். என்னைப் பார்த்து கிண்டலடித்தனர்
பிறகு சிறிது காலம் நான் ஆசிரமத்தில் போதனையாளராக இருந்தேன். அப்போதுதான் ஆசாராமின் சுயரூபத்தைப் புரிந்து கொண்டேன். அவருக்கு விதம் விதமான பெண்கள், இளம் பெண்கள், புதுப் பெண்கள் தேவை என்பதை உணர்ந்தேன். ஆனால் பல பெண்களை அவர் அனுபவித்த போதும் என்னையும் சித்திரவதை செய்ய அவர் தவறியதில்லை. தொடர்ந்து சித்திரவதைக்குள்ளானேன்
அங்கிருந்து தப்ப சமயம் பார்த்துக் காத்திருந்தேன். என்னைப் போலவே மன வேதனையில் இருந்த இன்னொரு பெண்ணும், நானும் 2007ம் ஆண்டு அங்கிருந்து தப்பி வந்தோம். பின்னர் நான் திருமணம் செய்து கொண்டேன் என்று அப்பெண் கூறியுள்ளார்
இரு சூரத் சகோதரிகளும், ஆசாராம் மனைவி லட்சுமி மற்றும் மகள் பார்தி ஆகியோர் மீதும் புகார் கூறியுள்ளதால், அவர்கள் இருவரும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர்
  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக