ஞாயிறு, 27 அக்டோபர், 2013

விஜயகாந்துக்கு காங்கிரஸ் தூது: டில்லியில் சந்திக்க ராகுல் திட்டம்

தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்தது போல், தமிழகத்திலும், மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்துக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அணியில் சேர, ம.தி.மு.க., தயாராக இருக்கிறது. ஆனால், தே.மு.தி.க., நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாமல், தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து, தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் விரும்புவதாகவும், அது தொடர்பாக, டில்லியில் விஜயகாந்தை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சி துவங்கியது. பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இந்த அணியில் சேர்க்க, பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆரம்ப நிலையிலேயே, அதை ஏற்க மறுத்த பா.ம.க., தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில், தனித்துப் போட்டியிட, அக்கட்சி தயாராகி விட்டது. இந்த கூட்டணி அமைய வாய்ப்பு இலை,, கேப்டன் விஜயகாந்த் அங்கு இங்கு மோதிவிட்டு கடைசியில் தலைவர் கருணாநிதி பக்கமே சாய்வார் என்பது எழுதபடாத விதி, திமுக+தேமுதிக+காங்கிரஸ்+பாமக+விடுதலை சிறுத்தை+முஸ்லிம் லீக்+புதியதமிழகம் நாற்பதும் ?
மூன்றாவது அணியில் இடம்பெற, தயார் நிலையில் ம.தி.மு.க., மட்டுமே உள்ளது. தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில், இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை.இந்த முயற்சிக்காக தூது சென்றவரிடம், 'இன்னும் நாள் இருக்கு... இப்பவே என்ன அவசரம்? பொறுமையா பாத்துக்கலாம்' என்று விஜயகாந்த் கூறி விட்டதும் தெரியவந்துள்ளது.மேலும், தேர்தல் செலவு, ராஜ்யசபா எம்.பி., 'சீட்' உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அந்த சந்திப்பின் போது, பேசப்பட்டுள்ளது. அதுபற்றிய தகவல்கள், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு தெரிவிக்கப்பட்டு, அவரும் ஒப்புதல் அளித்து விட்டார் என, கூறப்படுகிறது.ஆனால், பா.ஜ.,வுடன் சேர்ந்தால், சிறுபான்மையினர் ஆதரவை இழக்க வேண்டியிருக்குமே என்பதால், மூன்றாவது அணிக்கு உடன்பட விஜயகாந்த் தயங்குவதாக, தே.மு.தி.க., வட்டாரம் கூறுகிறது.

இந்நிலையில், காங்கிரசிடம் இருந்து, விஜயகாந்துக்கு தூது வந்துள்ளது. டில்லியில் இருந்து நேரடியாக, அவருடன் தொடர்புகொண்டு பேசியுள்ளதால், தமிழக காங்கிரஸ் வட்டாரத்துக்கு எதுவும் தெரியவில்லை.இதுகுறித்து டில்லி காங்கிரஸ் வட்டாரத்தில், சூதமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுடன் கூட்டு சேர விரும்பாத ராகுல், தே.மு.தி.க.,வுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம் என்று நினைக்கிறார். ஆளுக்கு, 20 தொகுதிகள் என, பங்கிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்பது ராகுல் திட்டம். தேர்தல் செலவு, ராஜ்யசபா, 'சீட்' போன்ற விஷயங்களுக்கும், காங்கிரஸ் தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, டில்லி வரவிருக்கும் விஜயகாந்துடன், இதுபற்றி ராகுல் பேச முடிவு செய்துள்ளார்' என்று
தெரிவிக்கப்பட்டது.

தே.மு.தி.க.,வுடன் மட்டும் சேர்ந்து போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என்பது தமிழக காங்கிரசாருக்கு நன்றாக தெரியும். ராகுல், அதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதால், இப்போது எந்த முட்டுக்கட்டையும் போட அவர்கள் விரும்பவில்லை.இதுதெரிந்து தான், ஏற்காடு இடைத் தேர்தலை காரணம் காட்டி, பா.ஜ.,வுக்கு கதவை திறந்து வைத்துள்ளார் கருணாநிதி என்று காங்கிரசார் கூறுகின்றனர்.கடைசி நேரத்தில், தமிழக காங்கிரசாரின் வற்புறுத்தல் காரணமாக, ராகுல் திட்டத்தில் மாற்றம் வரலாம்; கூட்டணியை பலமாக்க தி.மு.க.,வும் சேர்க்கப்படலாம் என்பதால், ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கலாமா என்ற சிந்தனை, தே.மு.தி.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக