ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மு.க.முத்து மருத்துவமனையில் !

தி.மு.க. தலைவர் கலைஞரின் மகன் மு.க.முத்துக்கு(65). திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூரில் இருந்து அவரை அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க காரில் அழைத்து வந்தனர்.
கார் புதுவைக்கு அருகில் வந்தபோது மு.க.முத்துவின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் புதுவை–விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஒரு தனியார்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மு.க.முத்துவை அவரது மனைவி சிவகாமசுந்தரி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். மேடைகளில் மெல்லிசை கச்சேரிகள் மற்றம் தி.மு.க. கொள்கை விளக்கப் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தி வந்த இவர் 1970-ம் ஆண்டு 'பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதனை தொடர்ந்து, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூக்காரி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து, சொந்த குரலில் பாடியும் உள்ளார். கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு பவித்ரன் இயக்கிய 'மாட்டுத் தாவணி' படத்திற்காக தேவாவின் இசையமைப்பில் ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெலிபோன் மூலம் டாக்டர்களை தொடர்பு கொண்டு மு.க.முத்து உடல்நிலை குறித்து விசாரித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக