ஞாயிறு, 6 அக்டோபர், 2013

அக்கா - தங்கை கற்பழிப்பு ; ஆசாராம் சாமியார் - மகன் மீது மேலும் வழக்கு

சூரத்: பல்வேறு ஆசிரமங்கள் நடத்தி வந்த ஆசாராம் சாமியார் மீது மேலும்
ஒரு கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த அக்காள் - தங்கை ஆகிய இருவரையும் சாமியாரும், அவரது மகனும் மிரட்டி கற்பழித்ததாக தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் பேர் பின்பற்றி வந்த ஆசாராம் சாமியார் மீது கடந்த செப். மாதத்தில் ஒரு இளம்பெண், ஆசாராம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுக்களும் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 2 பெண்கள், சாமியார் மீது ஒரு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் , நானும் எனது தங்கையும் சாமியாரின் வழியை பின்பற்றி வந்தோம். ஆமதாபாத் ஆசிரமத்தில் வைத்து தன்னை சாமியார் பலவந்தப்படுத்தி கற்பழித்தார். எனது தங்கையை சூரத்தில் சாமியாரின் மகன் நாராயண்சாய் கற்பழித்தார். இவர்கள் மீது புகார் கொடுக்க அச்சம் காரணமாக நாங்கள் காலம் தாழ்த்தினோம் இவ்வாறு கூறியுள்ளனர். இதனையடுத்து சூரத் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் சாமியார் மகனும் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் இருக்கும் சாமியாருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக