வெள்ளி, 18 அக்டோபர், 2013

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் வெளியே வந்த பயங்கர உண்மைகள் ! கணவனை காதலனோடு சேர்ந்து கொன்ற ஆசிரியை



மன்னார்குடி : கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனோடு கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் தனசேகரன் (39). கடந்த மே 14ம் தேதி தனசேகரன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீசார் தற்கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய சுமதி, கணவர் தனசேகரை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்துவிட்டதாக கூறினார்.இதுபற்றி தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார் சுமதிக்கு சம்மன் அனுப்பினர். இதனால் நேற்று திருவாரூர் விளமலில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆசிரியை சுமதி, கொலை செய்யப்பட்ட தனசேகரனின் தம்பி அருள் ஆகியோர் ஆஜராகினர். அப்போது போலீசாரிடம் சுமதி கூறுகையில், ''கள்ளக்காதலன் ராஜனுடன் சேர்ந்து எனது கணவரை 2 முறை கொல்ல முயன்றேன். எனது கள்ளக்காதல் விஷயம் தெரிந்து என்னிடம் கணவர் சண்டைபோடவே எனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.


அதன் பின் வீட்டில் தனியாக வசித்த கணவர் தனசேகரனை அதே டாக்டருடன் ராஜன் விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டார். அந்த டாக்டர் யார் என்றே எனக்கு தெரியாது'' என்றார். இதையடுத்து, மன்னார்குடி 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜ் முன்னிலையில் சுமதியை ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். சுமதியின் வாக்குமூலத்தின்பேரில் ராஜனையும் போலீசார் கைது செய்தனர். அவரை திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக