புதன், 30 அக்டோபர், 2013

நாடு முழுவதும் பெண்கள் சத்தமின்றி வன்முறைக்கு ஆளாகிறார்கள்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்தியத் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள்
நிறைய நடப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி போலீசார் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை பெண்களுக்கு ஏதிராக நடந்துள்ள குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், 1330 கற்பழிப்புகள், 2844  பாலியல் தொல்லைகள், 793 கேலி கிண்டல்கள், கிட்டத்தட்ட 3000 பெண்கள் கடத்தல், 2487 பேர் கணவன்களால் கொடுமைப்படுத்தல், வரதட்சனை கொடுமையால் 123 பெண்கள் கொலை என இந்த பட்டியல் நீள்கிறது.
 இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:-

கடந்த 5 வருடங்களில் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை  பொதுவாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பெண்கள் ஆங்காங்கே வெளியில் தெரியாதவாறு நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சில வழக்குகள் மட்டுமே வெளியில் தெரியவருகின்றது. துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது.maalaimalar.com

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பணக்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ரவுடிகள் பெண்களுக்கு பாலியல் வன்முறை செய்வதாக மாணவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அந்த மாணவி பணக்கார வர்க்கத்தால் ஒரு ஜீப்பால் நசுக்கப்பட்டார்.

ஒவ்வொரு நாளும் பெண்கள் ரெயில் மற்றும் பேருந்துகளில் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இன்று பெண்கள் பல வழிகளில் முன்னேறியுள்ளதால், அவர்கள் இந்த வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் அத்துமீறி நடந்துகொண்டது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த ஜூன் மாதத்தில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் நடந்த விசாரணையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  malaimurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக