ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஜில்லா பட கேரளா உரிமை மோகன்லாலிடம் ! தமிழர்களை சதா கொச்சைபடுத்தி காட்சி அமைக்கும் மோகன்லால் !

ஜில்லா’ படத்திற்கான கேரளா உரிமையை மோகன்லால் கைப்பற்றினார்.   இந்த மோகன்லால் ஒரு லேசுப்பட்ட ஆசாமி அல்ல. இவர் உண்மையில் ஒரு திறமையான நடிகர்தான் , அதில் சந்தேகமே இல்லை, ஆனால் என்ன அநேகமான சினிமா நடிகர்கள் போல இவரும் சொந்த வாழ்க்கையில் கைதேர்ந்த நடிகர்தான் , அமரர் திலகனின் திரைவாழ்வை சூறையாடிய இந்த மலையாள சினிமா Industry  மாபியா தலைவனால்   தமிழர் விரோத போக்கு கேரளா முழுவதும் பரவுகிறது , தனது படங்களில் தமிழர்களை பாண்டி என்று இனவாத பெயரால் அழைப்பது வழக்கம் இவரால் பாதிக்கப்பட்டவர் பட்டியலில் கவர்ச்சி நடிகை சகிலாவும் அடக்கம்
மதுரையை பின்னணியாக கொண்டு விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. நேசன் இயக்கும் இப்படத்தை ஆர்.பி.சௌதிரி பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். > இப்படம் பொங்கலன்று வெளியாகிறது. இதனிடையே ‘ஜில்லா’ படத்தின் கேரளா உரிமையை அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாள நடிகர் மோகன்லால்  வாங்கியிருக்கிறார். பலரும் கேரளா உரிமையை வாங்க போட்டி போட்டதில் மோகன்லால் பங்குதாரராக உள்ள ஆசீர்வாத் சினிமாஸ் அந்த உரிமையை கைப்பற்றியுள்ளது.

விஜய் படத்துக்கு கேரளாவில் எப்போதுமே பெரிய வரவேற்ப்பு உண்டு. அப்படியிருக்கையில் விஜய்யுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டாரும் நடிப்பதால் இப்படத்திற்கு கேரளாவில் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக