வியாழன், 24 அக்டோபர், 2013

உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது

I love to disturb people, because only by disturbing them can I make them think. They have stopped thinking for centuries. Nobody has been there to disturb them. People have been consoling them. I am not going to console anybody, because the more you console them, the more retarded they remain.osho.

அறிஞர்களை அல்லது வழிகாட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் ,
நமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்மை ஒரு சௌகரியமான மன நிலைக்கு இட்டு செல்பவர்கள் ஒரு வகை ,
அதாவது  நமது Comfort  Zone எனப்படும் மிக சுகமான ஒரு மன நிலையில் எம்மை ஆறுதல் படுத்தும் வழிகாட்டிகள் இவர்களாவர்,

அடுத்த வகையான வழிகாட்டிகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் மனிதர்களாவர் ,
நாம் நீண்ட நாட்களாக சுமந்து  கொண்டிருக்கும் சுகமான நம்பிக்கைகளை அல்லது கோட்பாடுகளை உடைத்து நம்மை மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்கி  விடுவார்கள் ! தீவிரமாக யோசிக்க வைத்துவிடுவார்கள் !
இவ்வகையான மனிதர்கள் நமது நிம்மதியையும் சிலவேளைகளில் தொலைத்துவிடுவார்கள் ,
Ignorance is Bliss அதாவது அறியாமையே ஆனந்தம் என்பது போல நாம் மிகவும் சரியான பாதையில் செல்வதாக எண்ணி கொண்டிருக்கையில் இந்த Disturb வழிகாட்டிகள் எமது கனவு சொர்க்கத்தை தகர்த்து விடுவார்கள்.

கனவு சொர்க்கத்தை கலைக்கும் காரியத்தை செய்யும் அறிஞர்களை மனித சமுதாயம் அவ்வளவு நிம்மதியாக இருக்க விட்டதில்லை ,
டார்வின், கலிலியோ, கோர்ப்பனிக்கஸ், சோக்கிரட்டீஸ் மற்றும் ஏராளமான Disturb காரரை மனித குல வரலாறு கண்டிருக்கிறது ,

நமது கனவுகளை கலைக்காமல் மேலும் மேலும் அக்கனவுகளில் ஊறி நம்மை மறந்து ஒரு சுகமான நம்பிக்கையில் நம்மை செலுத்தும் அறிஞர்களையும் ஏராளாமாக நாம் கண்டுள்ளோம்,
அநேகமான சமய அல்லது சமுக தலைவர்கள் பலரும் இந்த வகையை சார்ந்தவர்கள்தான் ,

இதில் யார் சரி அல்லது யார் தவறு என்பது அல்ல பிரச்சனை ,

கனவுகளை இறக்குமதி செய்யும் பலரும் தாங்கள் அந்த கனவுகளை நம்பி அதில் எதோ ஒரு புளகாங்கிதம் அடைந்து அதைபற்றி பிரசங்கம் செய்கிறார்கள் !

அல்லது தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றுகிறார்கள் .
 J.Krishnamurthi : One of our greatest difficulties is that we do not like to be disturbed, especially when we are a people steeped in tradition, in the easy ways of life, and with a culture that has merely become repetitive. Perhaps you have noticed that we put up a great deal of resistance to anything that is new. We do not want to be disturbed; and if we are disturbed, we soon adjust ourselves to a new pattern and again settle down, only to be again shaken, disturbed and troubled. So we go on through life, always being driven from a pattern into which we have settled down. The mind objects most violently and defensively to any suggestion of a change from within.
சிந்திப்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும் ,
சிந்திப்பது என்பது வாசிப்பதோ கேட்பதோ  போன்று  ஏதோ ஒருவகையில் எமது பொது அறிவை பெருக்குவது அல்ல !

நாம் பெற்றுக்கொண்ட தகவல்களில் இருந்து சுயமாகவே எமது சொந்த அபிப்பிராயங்களை அல்லது சொந்த விருப்பங்களை கண்டு பிடிப்பதுதான் சிந்திப்பது !
அவ்வளவு சுலபம் அல்ல!

எமது சொந்த விருப்பங்கள் என்று நாம் எண்ணி கொண்டிருக்கும் பலவிதமான விருப்பங்களும் கூட அடிப்படையில்  வேறு யாரோ எமது தலையில் பதிய வைத்த கருத்துக்கள் தான் என்பதே உண்மை,

நாம் கொண்டிருக்கும் சுய அபிப்பிராயங்கள் என்பவை எவ்வளவு தூரம் சுய அபிப்பியாயங்கள் என்று கண்டு பிடிப்பது ஒரு சவாலான விடயம் ஆகும்

மனிதசமுதாயம் பாரிய வரலாற்று தவறுகளை புரிந்திருக்கிறது !
மனிதகுலம் உருவாக்கிய அழிவுகள் எல்லாமே ஏறக்குறைய சுய சிந்தனை இல்லாமல்  இரவல் கருத்துக்களை பின்பற்றியதாலேயே உண்டாயிற்று ,

இது யாராலும் மறுக்க முடியாத சரித்திர சான்றாகும்.

எப்படித்தான் எண்ணி பார்த்தாலும் சிந்திப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமாக தோன்றாது ,
அது மிக சுலபம் போல தெரியும் ஆனால் அதுதான் மிகவும் சிரமமான காரியமாகும்,

மனித  வரலாற்றில் சுயமாக சிந்திக்காமல் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒரு சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள்தான் அதிகமாக உள்ளார்கள்.

சுய சிந்தனைக்காக நடந்த யுத்தங்களை விட யாரோ ஒருவருக்காக அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம்,

வரலாற்றில் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் தோன்றினாலும் ஏன் ஐசக் நியுட்டனுக்கு மட்டும் ஆப்பிள் பழம் கீழே விழுவதற்கு விசேஷ காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்று தோன்றியது ?

உலகம் தட்டையானது என்று மிகவும் சுகமாக நம்பி கொண்டிருந்த மக்களின் கனவை கலிலியோ கலைத்தார்,

உலகம் உருண்டையானது என்று கலிலியோ அறிவித்த பொழுது சமயவாதிகளும் கலாசாரா காவலர்களும் எகிறி குதித்தார்கள் .

நாம் எவ்வளவு சுகமாக கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் , இந்த படுபாவி கலிலியோ எல்லாவற்றையும் ஆட்டி அசைக்கிறானே ?
உலகம் உருண்டையாமே ?
அப்படிஎன்றால் நாம் அதன் எல்லைக்கு சென்றால் தடுக்கு விழுந்து விட மாட்டோமா ?
ஐயோ நினைக்கவே நடுங்குகிறதே?
இந்த சாத்தானின் சொற்கள் எமது நிம்மதியை குலைகின்றனவே?
உள்ளூர் பாதிரியார்கள் முதல் அயல் வீட்டு பண்டிதர்வரை இந்த Disturb பேர்வழியான கலிலியோவை வறுத்து எடுத்தார்கள் .

காலங்கள் சென்ற பின் கலிலியோவை இந்த உலகம் தலையில் வைத்து கூத்தாட தொடங்கி விட்டது .

கோர்பணிகஸ்  கலிலியோ மட்டுமல்ல அதற்கு முந்திய காலத்து சோக்ரடீஸ் கூட இந்த சிந்திக்க வெறுக்கும் மனிதர்களால் மிகவும் துன்பபட்டார்கள் ,

ஆனால் அவர்களின் சொற்களால்தான் உலகம் பெரிதும் முன்னேறியது எனலாம் !
சுய சிந்தனையாளன் தனது வாழ்நாளில் தனது கருத்துக்களுக்காக வெற்றி பெற்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் அரிது ,
சுய சிந்தனை தேவை படாமல் வெறும் மனனம் செய்து ஒப்புவித்தல் போன்ற கருத்து மழையை பொழியும் போலி அறிஞர்கள் தற்போது தாராளமாக உலாவுகின்றனர் .
இவர்களால் நாடும் வீடும் சமூகமும் எவ்வளவோ துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தாலும் இன்னும் இவர்களின் மயக்கு பொடி சோம்பல் தாலாட்டு பிரசங்கங்கள் ஓயவில்லை !

மீண்டும் மீண்டும் தமது அரைத்த மாவை மீண்டும் அரைக்கும்  தத்துவங்கள்! காலாவதியாகி போன  சமய கோட்பாடுகள்  ஏதோ என்றும் மாறாதவை போன்ற பொய்யான தோற்றத்தை  உண்மை என்று தாங்களும் நம்பி பிறரையும் சிந்திக்க விடாமல்  ஒரு Comfort  Zone இல் நிரந்தரமாக தள்ளிவிடுவது எவ்வளவு பெரிய அநியாயம் ?
இவர்கள் இரவல் அல்லது திருட்டு சமாசாரங்களை மக்களிடம் வலிந்து திணிக்கின்றனர்.
 தப்பி தவறி கூட சுய சிந்தனை வளர்ந்து விடகூடாது என்பதில் ஏன்தான் இத்தனை நாட்டமோ யானறியேன் ,

சந்தர்ப்ப வசத்தலோ அல்லது வேறு வழியில் யோசிக்க தெரியாமலோ மனிதர்கள் பலரும் இந்த போலிகளிடம் தமது நேரத்தையும் பணத்தையும் விரையமாக்குகிறார்கள்
எவன் உங்களை நீங்கள் விரும்பும் தாலாட்டுக்களை பாடிபாடி உங்களை ஒரு  வெறும்  வெற்றுமனிதர்கள்  ஆக்குகின்றனோ அவன் மனித  குலவிரோதி என்றுதான்கூறவேண்டும் !
உங்களுக்கு  பிடிக்காதுவிடினும்   உங்கள்  சொந்த சிந்தனையை  மழுங்க  அடிக்காதவன் எவனோ  அவன் தான் உண்மையான மனிதன் ,
 சுயசிந்தனை உள்ளவனை பொது இடங்களில் காண்பது அரிது ,
ஏனெனில் பொது ஸ்தாபனங்கள் எல்லாம் மனிதர்களை  சுயமாக சிந்திக்க விடாமல் சும்மா ஏதோ ஒன்றை  பின்பற்றுபவர்களாகவே  மாற்றுகின்றன .

எல்லாவற்றிலும் பார்க்க  நீங்கள் தான் உங்களுக்கு உரிய உண்மையான வழிகாட்டி என்பதை  மறவாதீர்கள் .
உங்கள் பகுத்தறிவே  உங்களின்  கலங்கரை விளக்கம் ,
சோம்பலினாலோ  அல்லது  நீங்கள் கொண்ட  சமய கலாசார கருத்துக்களினாலோ  உங்கள் சுய சிந்தனையை  நீங்களே  கேவல படுத்த தேவை இல்லை.  சமய கலாசார பிராடுகள் எல்லாம் உங்களை கேவல படுத்த அனுமதிக்காதீர்கள் .
நீங்கள் ஒரு உன்னதமான ஆத்மா ! சர்வ சக்திகளும் உங்களிடம் இருக்கிறது , radhamanohar.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக