செவ்வாய், 8 அக்டோபர், 2013

ஆடைகட்டுப்பாட்டை எதிர்த்து உள்ளாடையுடன் வகுப்புக்கு வந்த மாணவர்கள்

ஹங்­கே­ரிய பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கடு­மை­யான ஆடை கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பை தெரி­விக்க வகுப்­ப­றைக்குள் ஆடை­களைக் கழைந்து மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டதில் ஈடு­பட்­டுள்­ளனர். ஹங்­கே­ரி­யாவின் கபொஸ்வர் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
குட்டைப் பாவாடை, கவர்ச்­சி­யான ஆடைகள், கவர்ச்­சியாகத் தெரியும் ஒப்­பனை, சிகை அலங்­காரம், நகை அலங்­காரம் உள்­ளிட்ட பல விட­யங்­களை இலக்கு வைத்து புதிய நடை­மு­றையை குறித்த பல்­க­லைக்­கழகத்தின் தலை­வ­ரினால் கடந்த முதலாம் திகதி முதல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
ஆண் மாண­வர்கள் கரு­மை­யான ஆடைகள் மற்றும் காலணி அணிய வேண்டும். அத்­துடன் பெண் மாண­விகள் ஜக்கெட், மேலாடை மற்றும் காற்­சட்டை அணிய வேண்டும் என கடிதம் மூலம் மாண­வர்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த மாண­வர்­களே இவ்­வாறு ஆடை கழைந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இதில் ஆண், பெண் மாண­வர்­க­ளுடன் பேரா­சி­ரியர் ஒரு­வரும் கலந்­து­ கொண்­டுள்ளார்.
இவர்­களில் சிலர் கீழ் ஆடை­க­ளின்றி காணப்­பட்­ட­துடன் ஏனை­ய­வர்கள் முழு நிர்­வா­ண­மாக இருந்­துள்­ளனர்.  இதனை அந்­நாட்டு ஊட­க­ மொ­ன்று படம்­பி­டித்து இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டி­ருந்­தது.
சில மாண­வர்கள் உள்­ளாடை ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ளனர். வகுப்­பறை வெப்பம் கார­ண­மாக அனு­ம­திக்­கப்­பட்ட சில ஆடை­களை கழைந்தோம் என இவர்கள் தெரி­வித்­துள்ளார்.
இன்று (திங்­கட்­கிழமை) முதல் கடற்கரை துண்டுகளை (பீச் டவல்) அணிந்து வகுப்பில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்­பி­ட­த்­தக்­க­து.ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக