வெள்ளி, 11 அக்டோபர், 2013

2ஜி : பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கைக்கு 6 கட்சிகள் கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி முன்னாள் தொலைதொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது.< இதற்கிடையே இந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தலைமையில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையும் நடந்தது. கூட்டுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோருக்கு நற்சான்று அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆ.ராசா மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. அந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்த அறிக்கையின்மீது இப்போது தி.மு.க., அ.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பிஜூ ஜனதாதளம் ஆகிய 6 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குறிப்பறிக்கை அனுப்பி உள்ளன.

பாரதீய ஜனதா அனுப்பியுள்ள 36 பக்க அறிக்கையில், "பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி ப. சிதம்பரம் ஆகியோரின் ஊழல் மறைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழு அறிக்கை பொய்யையும், பாதி உண்மையையும் தொகுப்பாகக் கொண்டுள்ளது" என குறை கூறப்பட்டுள்ளது.

கூட்டுக்குழு அறிக்கை மீதான குற்றச்சாட்டுக்களை பி.சி.சாக்கோ மறுத்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று (நேற்று) மாலை கெடு முடிகிற நிலையில் கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 குறிப்பு அறிக்கைகள் வந்துள்ளன. (பாரதீய ஜனதா தவிர்த்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தி.மு.க., அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு குறிப்பு அறிக்கை தந்துள்ளன.) கூட்டுக்குழு கூட்டங்கள் ஜனநாயக முறையில்தான் நடைபெற்றன.

கூட்டுக்குழு அறிக்கையை பாராளுமன்ற சபாநாயகரிடம் அளிப்பதற்கு முன்பாக அதில் இருக்கிற அம்சங்களை வெளியிடுவது விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். ஆனால் பாரதீய ஜனதா தலைவர்கள் இதை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது துரதிர்ஷ்டவசமானது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக