திங்கள், 14 அக்டோபர், 2013

ம,பி நவராத்திரி விழா நெரிசலில் 115 பேர் பலி 115 pilgrims, including 30 children, were killed

நவராத்திரி விழாவில் பரிதாபம் : நெரிசலில் சிக்கி 109பேர் பலி மத்திய

பிரதேசம் மாநிலத்தில் டாடியா மாவட்டத்தில், ரத்னாகர் என்ற இடத்தில், துர்கா கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வழிபாட்டிற்கு, ம.பி.,யில் இருந்து மட்டுமல்லாது, உ.பி., மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால், பலர் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றனர். கோவிலை யொட்டி ஓடும், சிந்து நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலத்தில், வரிசையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விட்டதாக, யாரோ சிலர் வதந்தியை கிளப்பியுள்ளனர் இதை அறிந்த வரிசையில் சென்ற பக்தர்கள் திடீரென கலைந்து ஓடினர். ஒருவரோடு, ஒருவர் முட்டி மோதினர்.
குறுகிய பாலத்தில் பலரும் முண்டியடித்து கொண்டு ஓடியுள்ளனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி, 109 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர், பாலத்தில் இருந்து, ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தேடும் பணியில் தோல்வி ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பக்தர்கள், போலீசார் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து,போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைந்து போகும்படி செய்தனர். இந்த சம்பவத்தில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.காயம்அடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, 1.5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் மாநில அரசு அறிவித்துள்ளது. இத்துயர சம்பவம் குறித்து, மாநில முதல்வர், பா.ஜ.,வை சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக