சனி, 28 செப்டம்பர், 2013

JPC சாக்கோ மீது கலைஞர் அதிருப்தி ! அவசரமாக அறிக்கையை ஏன் வெளியிடவேண்டும் ?

சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) கூட்டத்தை அவசரமாக கூட்டி வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையின் முடிவுகளுக்கும், துறையிலே உள்ள ஆவணங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அதுமட்டுமல்லாது கூட்டுக்குழு தலைவர் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதார் என்றார். மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் சாக்கோவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளா
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக