சனி, 28 செப்டம்பர், 2013

வைக்கோலால் மூடபட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி ! மீட்பு பணி நடக்கிறதாம் ! மரணதண்டனையை இவங்களுக்கும் கொடுக்க வேண்டும்

300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுமி: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் சங்கர் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. ஆழ்துளைக் கிணறு தெரியாமல் இருக்க வைக்கோல், செடிகளை போட்டு மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வீட்டின் அருகே வயலில் வேலைபார்த்த தாயை பார்க்க 4 வயதான சிறுமி தேவி நடந்து சென்றுள்ளார். ஆழ்துளைக் கிணறை அறியாத சிறுமி செடிகளை மிதித்ததும் அதில் தவறி விழுந்து விட்டாள்.
இதனை அறிந்த ஊர் கிராம மக்கள் சிறுமியை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமார் 1 அடி விட்டம் உள்ள போரில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சிறுமி விழுந்த கிணறு அருகே பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மற்றொரு பள்ளம் தோண்டி சிறுமியை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக