வியாழன், 5 செப்டம்பர், 2013

ஜெயலிதா, அம்பானி ரெட்டி பிறதேர்ஸ். மோடி போன்றவர்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுமா ?

உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் ராசா மறுப்பு
என்ற செய்தி இந்திய ஊடகங்களிலும் குறிப்பாக மேட்டுக்குடி ஊடகங்களிலும் எதோ ஒரு பெரிய ஸ்கூப் செய்தி போல முழக்கி தள்ளுகிறார்கள் . அடடே இதுவரை இப்படி ஒரு உண்மை கண்டறியும் சோதனை இந்தியாவில் எந்த அரசியல்வாதி மீதும் அல்லது  எந்த பண முதலை மீதும் ஏன் பரிசோதனை செய்து பார்க்க வில்லை ?
ஒரு மிக பெரிய லிஸ்ட்டே இருக்கிறதே , நம்ப நாறேந்திரா மோடி இருக்காக , நம்ப ஜெயலலிதா இருக்கிறாக, நம்ப சரதுபவார் இருக்கிறாக, நம்ப அணிலு அம்பானி இருக்கிறாக, நம்ப சீமெந்து சீனி இருக்கிறாக, நம்ப சசியம்மா சுதாகரன் இருக்கிறாக , பாதி பார்ப்பான்கள் ஆகி செட்டில் ஆகிவிட்ட நம்ப மாறன் பிறதேர்ஸ் இருக்காக  ,சுரேஷ் களமாடி இருக்காக  ,சுரங்க ரெட்டி பிறதேர்ஸ் இருக்காக ,அட நம்ப மாயா லால்லு  முலாயம் போல இன்னும் பல நூறு அல்லது ஆயிரம் பெரிசுகள் எல்லாம் இருக்காக , அவிங்களைஎல்லாம் விட்டுபுட்டு , ஊருக்கு இளைச்சான் ஆண்டி என்பது போல  ஒரே அமுக்கு அவனை என்று எல்லார் கவனத்தையும் டைவேர்ட் பண்ண இவனை தான் யூஸ் பண்ணனும்  என்ற நோக்கத்தில் காங்கிரஸ்  செயல்படுவது புரிகிறது , ஒரே கல்லில் பல மாங்காய் ! திமுகவை அடக்கிவைத்த மாதிரியும் இருக்கும் ! ஆயிரம் ஆண்டு தகராறுகளுக்கும் எதோ தற்காலிக ஐஸ்க்ரீம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக