வியாழன், 5 செப்டம்பர், 2013

கழிவு நீர் தொட்டியை மனிதர் சுத்தம் செய்ய தடை! அரசு உத்தரவு ! Better late than never !

சென்னை:"உள்ளாட்சி அமைப்புகளில், மனிதர்களைக் கொண்டு, கழிவு நீர்
நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்வது, அறவே தவிர்க்க வேண்டும்' என, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:ஐகோர்ட் அறிவுரை மற்றும் அரசாணையின்படி, மனிதர்களைக் கொண்டு, கழிவு நீர் நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்வது, அறவே தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
சக தமிழன் கழிவு நீருக்குள்ள மூழ்கி சுத்தம் பண்றான் சுதந்திரம் கிடைத்து இத்தன வருஷம் கழிச்சும் அப்போ இத்தன வருசமா ஐ.ஏ.எஸ் படிச்சு வேல பாத்தவங்க இத ஏன் தடுக்குல ? மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணுனவனுக்கு எப்படி இருக்கும்? சரி இந்த திருமாவளவன் கட்சி ஆரம்பிச்சு என்னதான் சாதிச்சார் ? ஒருவேள இந்த கழிவு நீர் சுத்தம் பண்ணுறவங்க இலங்கை தமிழர்களா இருந்திருந்தா வைகோவும் சீமானும் சவுண்டு குடுத்து இருப்பங்களோ அட இந்த தொழிலாளர்கள தா பாண்டியன் கட்சி கூட கண்டுக்கலையே ஏன் ? இத ஒரு தொழிலாவே பாக்கலையா ?

*கழிவு நீர் சேகரிப்பு குழாய்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சேகரிப்பு கிணறுகள், பம்பிங் ஸ்டேஷனில் உள்ள தொட்டிகள், ஆகியவற்றை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், கழிவு நீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும், தனியார் நிறுவனங்களில், பணி அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள், ஓட்டுனர், ஆகியோருக்கு, உரிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என சரி பார்க்க வேண்டும். வழங்கப்படாவிட்டால், சம்மந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கழிவு நீர் நச்சு தொட்டி சுத்தம் செய்யும், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை, ஒவ்வொரு மாதமும் அழைத்து, அவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், அவற்றை பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகளை விளக்க வேண்டும்.
*உரிய பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் இல்லாமல், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளில், பணியாட்கள் கழிவு நீர் நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்ய இறங்குவதை, முழுமையாக தவிர்க்க வேண்டும். நடவடிக்கை&உரிய உயிர் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், நச்சுத் தொட்டியில் இறங்க முற்படும் பணியாளர்கள், கழிவு நீர் வாகனத்தை, உரிய முறையில், பயன்படுத்த தவறும் பணியாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், ஏதேனும் உயிரிழப்பு போன்ற நிகழ்வு ஏற்பட்டால், அருகில் உள்ள, போலீஸ் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*இதுபோன்ற நிகழ்வுகள், தனியார் குடியிருப்புப் பகுதி, வணிக வளாகம், விடுதி, உணவகம் போன்ற பகுதிகளில் நிகழ்ந்தால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், போலீஸ் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். /> உரிமம்</நகரில் உள்ள கழிவு நீர் சுத்தம் செய்யும், தனியார் கழிவு நீர் அகற்று ஊர்தி உரிமையாளர்கள், சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், உரிமம் பெறும்போது, உரிய பாதுகாப்பு சாதனங்கள் உள்ளனவா என சரி பார்த்த பின்னரே, உரிமம் வழங்க வேண்டும்.
*நகராட்சி, மாநகராட்சி நகர்நல அலுவலர், பொது கழிப்பிட கழிவு நீர் நச்சுத் தொட்டிகளை, வாரம் ஒரு முறையேனும், தகுந்த ஆய்வு செய்து, கமிஷனருக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். கமிஷனரும், தனது ஆய்வில், இதை கண்காணிக்க வேண்டும்.
*மாநகராட்சி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள், நகராட்சி கமிஷனர்கள், பொறியாளர்கள், அனைத்து பணிகளையும் பார்வையிடும்போது, அவர்களின் வாகனங்களில், கண்டிப்பாக பாதுகாப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக