வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கலெக்டர் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து அதே அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயற்சி !

 தேனி: கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி தேனி மாவட்ட கலெக்டர்
அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணை கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு காதல் ஜோடியினர் கையில் மண்எண்ணை கேனுடன் வந்தனர். காதல் திருமணம் செய்த தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், தற்கொலை செய்து கொள்ள வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடியின் கையில் இருந்த மண்எண்ணை கேனை பறித்துக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்எண்ணை கேனுடன் வந்த காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தை சேர்ந்த பூபதிராஜன் என்பவருடைய மகன் கபில் (வயது 26) என்பதும், அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் என்பவருடைய மகள் ஜெகதீஸ்வரி (24) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து கபில் போலீசாரிடம் கூறியதாவது:–
கலப்பு திருமணம்
நான் பி.டெக். படித்து முடித்து விட்டு, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். ஜெகதீஸ்வரி ரஷ்யா நாட்டில் எம்.டி. மருத்துவம் படித்து முடித்து உள்ளார். ஒரே பகுதியில் வசித்து வரும் நாங்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி சென்னையில் நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
அதன்பிறகு நான் எனது வீட்டிற்கும், ஜெகதீஸ்வரி அவருடைய வீட்டிற்கும் சென்று விட்டோம். இந்நிலையில் ஜெகதீஸ்வரியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்ததால் எங்கள் காதல் இரு வீட்டிற்கும் தெரியவந்தது.
எனது பெற்றோர் காதலை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவருடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து எங்களை மிரட்டி வருகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் வீட்டில் இருந்து உடைமை களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு கேட்டு வெளியேறி விட்டோம்.
இவ்வாறு கபில் தெரிவித்தார்.
போலீசில் புகார்
இதையடுத்து கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை போலீசார் தேனி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் சின்னமனூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து காதல் திருமண ஜோடி புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். daiylythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக