வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வளர்ந்த நாடுகளின் செயலால் ரூபாய் மதிப்பு வீழ்ந்தது ஜி–20 மாநாட்டில் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு

மாஸ்கோ, வளர்ந்த நாடுகளின் செயலால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
அடைந்ததாக ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார்.
ஜி–20 மாநாடு ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜி–20 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களின் முன்னிலையில், பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியா கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அன்னிய முதலீடு வந்தால், இதை சரிக்கட்டி விடலாம். அன்னிய முதலீடு திடீரென நின்று விடும்போதுதான் பிரச்சினை ஆகிவிடுகிறது.


நடப்பு கணக்கு பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் 3.7 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிறகு, அதை 2.5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
வளர்ந்த நாடுகள்
மேலும், வளர்ந்த நாடுகள் மரபுக்கு அப்பாற்பட்டவகையில், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அளித்தன. பிறகு திடீரென அந்த சலுகைகளை வாபஸ் பெற்றன. இதனால், எதிர்விளைவு ஏற்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் கரன்சி மதிப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. பொருளாதார ஊக்கச்சலுகைகளை படிப்படியாகத்தான் வாபஸ் பெற்றிருக்க வேண்டும்.
கரன்சி மதிப்பு ஊசலாட்டத்தை சீர்செய்ய ஜி–20 அமைப்புக்குள் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜி–20 நாடுகள் அமைப்பு, கூட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சீர்திருத்தம்
இந்தியா ஏற்கனவே பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. வருங்காலத்தில், மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை அமல்படுத்தப்படும்.
இவ்வாறு மன்மோகன்சிங்கூறினார் ,daiyliythanthi.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக