ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

வடிவேலுவுக்கு ஓய்வே இல்லை ! எதிரிகள் கூட அவரது முகத்தைத்தான் தினசரி ரசிக்கிறார்கள் !

கேப்பே தெரியலையா யோவ்... என்னையா கேப்பு! தொடர்ந்து
நடிக்கப்போவதாக நடிகர் வடிவேலு பேட்டி!இரட்டை வேடத்தில் தான் நடித்து வரும் 'ஜெக ஜால புஜபல தெனாலிராமன்' என்ற திரைப்படம் பொங்களுக்கு வெளியாகிறது. அதன் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடக்க உள்ளதாகவும் நடிகர் வடிவேலு கூறியுள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தப் படத்தின் பணிகள் 65 சதவிகிதம் முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் தெனாலிராமன், கிருஷ்ண தேவராயர் ஆகிய இருவேடங்களில் நடிக்கிறேன். படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளது. பொங்களுக்கு இந்தப் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தின் ஷுட்டிங் ஆரம்பித்து நடிக்கிறபோது, கேப்பே தெரியலையா யோவ்... என்று எல்லோரும் என்னை கேட்டார்கள். என்னையா கேப்புன்னு கேட்டேன். இடையில் நடிக்காமல் இருந்ததே தெரியவில்லை. உங்கள் காமெடியை பார்த்தால் பிரஷர், சுகர் எல்லாம் இறங்கும். ஆனால் இப்ப சிலருடைய காமெடியைப் பார்த்தால் பிரஷர், சுகர் அதிகமாகுது.
இதனால் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதாக உள்ளது என சொல்கிறார்கள். >கிணற்றை காணவில்லை என்று நான் நடித்த நகைச்சுவை காட்சிகள் தற்போது நிஜமாகவே நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சொந்தமாக படம் எடுக்க தயாராக இல்லை. கடந்த இரண்டு கால ஓய்வை குடும்பத்தினருடன் செலவிட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக