ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இந்தியாவை பார்த்து உலகம் சிரிக்கிறதாம் ! டுபாக்கூர் மோடி சொல்கிறார் ! இந்த படத்தை பார்த்து யார் சிரிக்கிறார்கள் ?


ஊழல் மலிந்துள்ள இந்தியாவைப் பார்த்து உலக
நாடுகள் சிரிக்கின்றன: டெல்லியில் நரேந்திர மோடி பேச்சு
பா.ஜனதா சார்பில் டெல்லி ஜப்பான் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
மோடி பேசியதாவது,
ஊழல் புகார்களால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடங்கிப்போய்விட்டது. ஊழலை மூடி மறைக்கவே மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்திய வரலாற்றில் எந்த மத்திய அரசும் ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அடுத்தடுத்த கண்டனத்திற்கு இதுபோன்று ஆளானதில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி காந்தி பக்தியில் மூழ்கியுள்ளது. அவர்களது காந்தி பக்தி என்பது காந்தி உருவம் பொறித்த ரூபாய் நோட்டுக்களை கொள்ளையடிப்பதில் முனைப்பு காட்டுவதே ஆகும்.
நான்கு புறமும் நல்ல ஆட்சிக்காக மக்கள் ஏங்குகிறார்கள். எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டிய தருணம் இது. இதற்கு நல்ல ஆட்சி மட்டுமே தீர்வாக அமையும். டெல்லியில் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகார மையங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் தனித்தனியாக அரசாங்கம் நடத்துகிறது.
தற்போதைய ஆட்சியாளர்களை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு புதிய அணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் சிக்கியுள்ளார்கள். டெல்லியில் ஆட்சிக்கு வர வேண்டியது வளர்ச்சி பற்றி கனவு காணும் அணியே. தவறான அணி ஆட்சியில் நீடிக்கக் கூடாது. மக்கள் அவர்களை தூக்கி எறிய வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டது. 120 கோடி மக்களை கொண்ட இந்தியா அமெரிக்காவிடம் போய் உதவி கேட்கலாமா. இந்தியாவோடு ஒப்பிடும்போது உலக நாடுகள் முன்னேறிச் செல்கின்றன. நமக்குப் பிறகு உதயமான நாடுகள் எல்லாம் முன்னேற்றப் பாதையில் உள்ளன. முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் அவர்களிடம் உள்ளது. நாம்தான் அதிவேகமாக பின்னோக்கிச் செல்கிறோம். ஊழல் மலிந்துள்ள இந்தியாவைப் பார்த்து உலக நாடுகள் சிரிக்கின்றன என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக