செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பண்ருட்டியாரை தே மு தி க விலிருந்து விரட்ட சதி ! கையை பிசையும் விஜயகாந்த்


தே.மு.தி.க.,வில் இருந்து, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வெளியேற்ற, அக்கட்சியில் உள்ள, மூவர் குழு தீவிரமாக வேலை பார்க்கிறது. இது தெரிந்தும், "அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாது' என, செயற்குழு கூட்டத்தில், விஜயகாந்த் வெளிப்படையாக அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 2006, சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட, கட்சிகளை சேர்ந்த பலர், தே.மு.தி.க.,வில் இணைந்தனர். இதில், குறிப்பிடத்தக்கவர், பண்ருட்டி ராமச்சந்திரன்.சென்னையில் இருக்கும் நாட்களில், காலை, 11:30 மணிக்கு கட்சி அலுவலகம் வருவதை, விஜயகாந்த் வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவரிடம், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., ஆஸ்டின் மற்றும் சிலர், மணிக்கணக்கில் அமர்ந்து அரசியல் பேசுவர்.இவர்கள், விஜயகாந்திடம் நெருக்கமாக பழகியதால், ரசிகர் மன்றத்தில் இருந்து அரசியலுக்கு வந்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலருக்கு நெருக்கடி அதிகரித்தது.பலருக்கு கட்சி பதவி வழங்க, இவர்கள் நடத்திய நால்லப்பட்டது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டாக இவர்களை விஜயகாந்த், ஓரம் கட்டி வைத்திருந்தார்.


அதிருப்தி அடைந்த அவர்கள், விஜயகாந்துடன் நெருக்கமாக உள்ளவர்களை வெளியேற்றும் திட்டத்தை துவங்கினர். அதன்படி, முதலில் சுந்தர்ராஜன்; இரண்டாவதாக பாண்டியராஜன்; மூன்றாவதாக ஆஸ்டின் வெளியேறினர்.தற்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே எஞ்சியுள்ளார். இவரை வெளியேற்றி விட்டால், கட்சியில் தங்கள் கை ஓங்கும் என்று நம்பும் அவர்கள், அதற்கான காய் நகர்த்தலை துவக்கி உள்ளனர்.

"சென்னையில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டம், செப்., 1ம் தேதி நடக்கும்' என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பில், கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை, திட்டமிட்டு புறக்கணித்ததாக கூறப்படுகிறது.இதனால், அதிருப்தி அடைந்த பண்ருட்டி ராமச்சந்திரன், விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இது செயற்குழு கூட்டம் நடந்த போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், விஜயகாந்த் வற்புறுத்தலை அடுத்து, பண்ருட்டி ராமச்சந்திரன், பல மணி நேர தாமத்துக்கு பின், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.விஜயகாந்த், உத்தரவை பெற்று தான், செயற்குழு அறிவிப்பை வெளியிட்டதாக கூறி வருகின்றனர். மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் மீது பிரேமலதா மற்றும் சுதீஷ் கோபத்தில் இருப்பதாக, இவர்களே தகவலை கசிய விட்டுள்ளனர்.ஆனால், விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன் காலில் விழுந்து பிரேமலதா ஆசிர்வாதம் வாங்கினார். இதில், இருந்த அவர் மீது, பிரேமலதாவிற்கு எந்த கோபம் இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.செயற்குழு கூட்டத்தில் பேசிய சிலர், "மூவரால் தான் கட்சி பலமிழந்து வருகிறது; பலர் வெளியேறுகின்றனர்' என, மறைமுகமாக பேசினர்.

அதை புரிந்துக் கொண்ட விஜயகாந்த், "மூன்று பேரை மாற்றிவிட்டு, வேறு மூன்று பேரை வைத்துக் கொண்டால், அவர்கள் கழுத்திற்கும் கத்தி வரும்; அதனால், மூன்று பேரை மாற்ற முடியாது' என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது.இது, பண்ருட்டி ராமச்சந்திரனை மேலும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில்
, "கட்சி ரகசியங்கள் அனைத்தும் அந்த, மூன்று பேருக்கும் தெரியும். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், கத்தி யார் கழுத்துக்கு திரும்பும் என்பதும் தெரியும். அதனால், தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்' என்றனர்.

தே.மு.தி.க.,வில் தற்போது இது தொடர்பான விவாதமே பரபரப்பாக அரங்கேறி வருகிறது.
- நமது நிருப dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக