செவ்வாய், 3 செப்டம்பர், 2013

குற்ற பின்னணி உள்ளவர்கள்தான் தேர்தலிகளில் வெற்றி பெறமுடியும் !

புதுடில்லி : நடப்பு லோக்சபாவில், மொத்தமுள்ள உறுப்பினர்களில், மூன்றில்
ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே அளவுக்கு, பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்கள் மீதும், குற்ற வழக்குகள் உள்ளன.லோக்சபா உறுப்பினர்கள், பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்களில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து, தேர்தல் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் தன்னார்வ நிறுவனம் ஒன்று, நாடு முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது. வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை யொட்டி, இந்த சர்வே நடத்தப்பட்டது. 2004ம் ஆண்டு முதல் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வரும் வேட்பாளர்கள், 63 ஆயிரம் பேரிடம் சர்வவே நடத்தப்பட்டது. இதில், 11 ஆயிரம் பேர், தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஒப்புக்கொண்டனர். 5,000 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.


நடப்பு லோக்சபாவில், எம்.பி.,யாக உள்ள, 543 பேரில் 162 பேர் (30 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 76 மீது கடுமையான குற்றங்கள் உள்ளன.பல்வேறு மாநில சட்டசபைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில், 31 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 1,258 எம்.எல்.ஏ.,க்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, 23 சதவீதம் பேர் மீது, கடும் குற்ற வழக்குகள் உள்ளன. 12 சதவீத வேட்பாளர்கள் தான், எவ்வித குற்ற பின்னணியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.இதை வைத்து பார்க்கும்போது, குற்றப்பின்னணி உள்ளவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை நிலவுகிறதுdinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக