புதன், 4 செப்டம்பர், 2013

ஆபாச சிடியில் மனைவி உருவம் தெரிந்தது ! காசுகொடுத்து மனைவியின் சிடியை பார்த்த பரிதாபம்

நாகர்கோவில்:நாகர்கோவிலில் ஆபாச சிடிக்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கடையில் ஆபாச சி.டி. வாங்கிய நண்பர்கள் சிலர், அதனை போட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். சி.டி.யில் வாலிபருடன் உல்லாசமாக இருந்த பெண்ணின் முகத்தை பார்த்த நண்பர்களில் ஒருவருக்கு கடும் அதிர்ச்சி. சி.டி.யில் இருப்பது தனது நண்பர் மனைவி போல உள்ளதே என சந்தேகப்பட்ட அவர் மீண்டும் உற்று கவனித்தார். நண்பனின் மனைவிதான் என்பதை உறுதி செய்து கொண்டு சக நண்பர்களிடம் தெரிவித்தார். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட நண்பரிடம் தெரிவிக்க முடிவு செய்தனர்.


சிடியை எடுத்துக் கொண்டு நாகர்கோவில் அருகே கிராமத்தில் வசிக்கும் நண்பர் சுயம்புவை (பெயர் மாற்றம்) சந்திக்க சென்றனர். அவரிடம் விவரத்தை கூறி சி.டி.யை கொடுத்தனர். சிடியை போட்டு பார்த்த சுயம்புக்கு தூக்கிவாரி போட்டது. அதில் இருப்பது தனது மனைவிதான் என்பதை உறுதி செய்தார். தன் மனைவி வேறொருவருடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து வேதனையும் ஆத்திரமும் அடைந்த அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சிடியுடன் விரைந்தார். மனைவியின் நடத்தை குறித்து புட்டு புட்டு வைத்தார்.

இதையடுத்து சுயம்புவின் மனைவி கனியை (பெயர் மாற்றம்) போலீ சார் வரவழைத்து பேசினர். தன்னை பற்றி கணவர் அபாண்ட பொய் கூறுவதாக தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கனி. ஆனால் சி.டி.யை போட்டு காண்பித்த பிறகு அவர் அமைதியானார். ‘தனக்கு யாரோ போதை மருந்து கொடுத்து இப்படி படம் எடுத்துள்ளனர்‘ என்று கூறினார். ஆனால் அதை சுயம்பு நம்பவில்லை. மனைவியை பிரிய முடிவு செய்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு இருவரும் பிரிந்து சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், சி.டி.யில் இருப்பது அந்த பெண்ணின் கள்ளக்காதலன். அவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்து விசாரித்தால் தான் யார் வீடியோ எடுத்து வெளியிட்டது பற்றி முழு விவரம் தெரியவரும் என்றனர் -tamilmurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக