வெள்ளி, 27 செப்டம்பர், 2013

காதல் படங்களாக நடிக்க விஜய் முயற்சி ! மாஸ் பில்டப் அம்மாவுக்கு பிடிக்காதே ? தலைவா மறக்க முடியுமா ?

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைபப்டத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜில்லா. நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் ஜில்லா திரைப்படத்தில் நடித்துவரும் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். ஒருபுறம் துப்பாக்கி திரைப்படம் இந்தியில் ‘Holiday' என்ற பெயரில் வேகமாக உருவாகிக்கொண்டிருக்க, மறுபுறம் விஜய்யுடன் இணையும் திரைப்படத்தில் சமந்தாவை ஹீரோயினாக செலக்ட் செய்வது என இரு படங்களிலும் ஒருசேர பணியாற்றிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். நேசன் இயக்கும் ஜில்லா திரைப்படத்தை விஜய்யும்,  Holiday திரைப்படத்தை முருகதாஸும் இந்த வருட இறுதிக்குள் முடித்துவிட்டு ஜனவரியிலிருந்து தாங்கள் இணையும் திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்களாம்

 இந்நிலையில் பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்‌ஷனுக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி திரையுலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு விஜய் கவிதாலயா புரொடக்‌ஷனில் ரமணா இயக்கிய திருமலை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தன் படங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க காதலை மையமாகக் கொண்ட சில திரைப்படங்களில் நடிக்கலாம் என்று விஜய் முடிவெடுத்திருப்பதாக பேசப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக