புதன், 18 செப்டம்பர், 2013

மதிமாறன் :பக்தனாக இருந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம்

bagat பக்தர்களுக்கு கோயில் உள்ளே நுழையவே தடை இருந்தது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘பள்ளன்-பறையன்-சாணான்-சக்கிலி நுழையத் தடை’ என்று 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வைத்திருந்தார்கள். அதை எழுதி வைத்தது நாத்திகர்கள் அல்ல; முருகனுக்கு நெருக்கமாக இருந்த பக்தர்கள்.
தமிழ்க் கடவுள் ‘பச்சைத் தமிழர்களை’ உள்ளேயே விடல.
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் தான் போராடி அதை அகற்றி, முருகனை வழிபடும் உரிமையை பெற்றுத் தந்தந்தார்கள்.
இதுல, நாத்திகர்கள் கோயில் சொத்துக்களைப் பயன்படுத்த தடையாமா… ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது பக்தர்களிடம். ஆனாலும் பிரபல பக்தர்கள், ஆதினங்கள், சங்கராச்சாரியார்கள் – கொஞ்சம் கூட சிவனிடம் பயமில்லாமல் துணிச்சலா கொள்ளையடிக்கிறார்கள். முன்னாள் மந்திரியும் இப்போதும் தீவிர பக்தராக இருக்கிற கம்பன் மீது காதல் கொண்ட ஒருத்தர் திருச்செந்தூர் முருகன் வேலை தூக்கிட்டு போயிட்டாரு என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
பக்தனாக இருந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம். மடத் துறவியா இருக்கிறவன் கோயில் பிரகாரத்திலேயே கொலை செய்யலாம். குருக்களாக இருக்கிறவன் கோயில் கருவறையையே கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்தலாம்.

ஆனால், நாத்திகன் முறையாக வாடகை கொடுத்து கோயில் சொத்துக்களை பயன்படுத்தக் கூடாது. நல்லா இருக்கு நியாயம்.
எனக்கு ஒரு சந்தேகம், உண்மையிலேயே யாரு நாத்திகர்?
முறையா வாடகை கொடுக்கிறவனா, இல்லை கோயிலை கொள்ளையடிக்கிறவனா?
சரி. நாத்திகர்கள் கோயில் சொத்துக்களை பயன்டுத்த தடையை எப்படி அமல் செய்வார்கள்? நாத்திகர்களை எப்படி அடையாளம் காண்பார்கள்? அப்படியே அடையாளம் கண்டாலும், தன் குடும்ப உறுப்பினராக இருக்கிற பக்திமான் கோயில் சொத்துக்களை பயன்படுத்த உரிமை இருக்கும்போது அவரிடமிருந்து அல்லது அந்தக் குடும்பத்திலிருந்து நாத்திகர்களை எப்படி தனிமைப் படுத்துவார்கள்?
ஒருவேளை நாத்திகர்களை கோயில் உள்ளே அல்ல, குடும்பத்திடமிருந்தே வெளியேற்றி விடுவார்களோ?
கொலை-கொள்ளை-விபச்சாரம் செய்தவர்கள் கோயில் சொத்துக்கள் மட்டுமல்ல, அரசின் அனைத்து சொத்துக்களையும் பயன்டுத்தத் தடை என்றால் சரி. ஆனால்..
தமிழ் நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன்னா வரும். வரும் என்ன… வந்தாச்சு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக