வியாழன், 26 செப்டம்பர், 2013

பெண்ணை நிர்வாணமாக பார்க்க விரும்பிய போலீஸ் ! கற்பழிப்பு புகார் கொடுக்க போலீசுக்கு போன பெண் பட்ட பாடு ! விளங்கிடும் !

உத்தர பிரேதேச மாநிலத்தில் கற்பழிப்பு புகார் அளிக்கவந்த பெண் ஒருவரை
காவல் துறையை சேர்ந்த ஒருவர் ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக புகார் அளிக்க அவர் பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். நடந்தவற்றை கேட்டறிந்த காவல் துறை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு அறைக்குள் பூட்டி அவரிடம், புகாரில் தெரிவித்துள்ள படி, நீ பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே உனது ஆடையை கழற்று என வற்புறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக