வியாழன், 26 செப்டம்பர், 2013

மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கர்நாடகத்திலும் அமுலாகிறது ! நரபலி அளவுக்கு அட்டகாசம் எகிறுகிறது

பெங்களூரு, செப். 25- கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந் திரா  அளித்த பேட்டி வருமாறு:
மகாராஷ்டிரா மாநி லத்தில் அமலில் உள்ள மூடநம்பிக்கைக ளுக்கு எதிரான சட் டத்தைப் போல் ஒரு சட் டத்தை கருநாடகாவி லும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ் டத்தில் இருப்பவர் களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக் கிறது.
மந்திரவாதிகள் ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள்.
அதுபோன்ற பல சம்ப வங்கள் கருநாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள் ளன. சில சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப் பட்டுள்ளன. இது போன்ற மாய, மந்திரங் களுக்கு கடிவாளம் போட புதிய சட்டம் அவசியப்படுகிறது.
மகாராஷ்டிராவிலுள்ள சட்டத்தைவிடவும் வலு வான சட்டமாக இது இருக்கும். தேசிய சட்டப் பள்ளியின் சட்ட நிபுணர்களிடமும், கருநா டக சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்களிட மும் கருத்து கேட்டு, விரைவிலேயே புதிய சட்டம் கொண்டு வரப் படும்.
நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம் 2013 என்ற பெயரில் இந்த சட்டம் அறிமுகம் செய் யப்படும். பெங்களூரிலுள்ள டாலர்ஸ் காலனி வீட் டில் குடியேறினால் உயி ருக்கே ஆபத்து என்று ஒரு ஜோதிடர் என்னி டம் கூறினார். இதைக் கேட்ட எனது மனைவி அச்சமடைந்து, அந்த வீட்டுக்கு குடிபோக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நான் அதை பொருட் படுத்தவில்லை. இப் போது, அந்த ஜோதிடர் எங்குள்ளார் என்பதே தெரியவில்லை.
இந்த புதிய சட்டம், எந்த ஒரு தொழிலையும் குறிவைத்து கொண்டு வரப்படாது. மூட நம் பிக்கைகளைப் பரப்பு வது யாராக இருந்தா லும், அது எந்த வகை யில் பரப்பப்பட்டாலும் நட வடிக்கை எடுப்பது தான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளை பரப்புவோருக்கு தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற் றின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். எது மூட நம்பிக்கை, எது நம் பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டு வரும் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டிருக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக