புதன், 18 செப்டம்பர், 2013

திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயர் ! வீரமணி கோரிக்கை !

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில்
செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டு!
திருச்சி விமான நிலையத்திற்குத்  தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்
தந்தை பெரியார் பிறந்த நாளில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

சென்னை, செப்.17- திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளையும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டினையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தினை உடனே செயல்படுத்த மாநில அரசிற்கு கோரிக்கையினையும் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மலர்வளையம் வைத்து உறுதிமொழி!
தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் புடைசூழ மாலை அணிவிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் தொண்டர்கள், மகளிரணியினர் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலை மையில், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
பின்பு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் பேட்டியளித் தார். பேட்டி வருமாறு:
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. இந்த நாளில், பெரியாருடைய புகழ் பாடுவது மட்டும் நம் முடைய நோக்கமல்ல; பெரியாரால் பயன் பெற்றவர்கள் இந்நாளை நன்றித் திரு நாளாக இதனைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் ஓங்கிய கல்வி அறிவு, சிறந்த பகுத்தறிவாக மாறவேண்டும் என்பதற்காக, மீண்டும் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.
பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு போன்ற லட்சி யங்கள் இன்னும் முழுமையாக நிறை வேற்றப்படாத நிலையில், பெரியார் பிறந்த நாள், மீண்டும் அக்கொள் கைகளைப் பரப்புவதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த விழாவாகும்.
முக்கியமான கோரிக்கை!
பெரியாருடைய உழைப்பை, உலக நாடுகள் முழுவதும் பாராட்டிப் பெரு மைப்படுத்துகின்ற இவ்வேளையில், மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு முக்கி யமான கோரிக்கையை, உலகம் முழு வதும் உள்ள பெரியார் தொண்டர்கள் சார் பில் மட்டுமல்ல, பெரியார் பற்றாளர்கள் சார்பாகவும் வெளியிட விரும்புகிறோம்.
பெரியார் பிறந்த நாளில் கிடைத்த பரிசு!
மத்திய அரசைப் பொறுத்தவரையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அதே வழித் தடத்தில் நிறைவேற்று கிறோம் என்ற அறிவிப்பு, பெரியார் பிறந்த நாள் விழாவிலே கிடைத்த ஒரு நல்ல பரிசு என்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது. ஆயிரம் எதிர்ப் புகள் வந்தாலும், மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண் டும். திருச்சி விமான நிலையத் திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் மத்திய அரசு என்பதை நாங்கள் முழுமையாக இன்றைக்குத் துவக்குகிறோம். இதனை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அத்துணை பேருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம் - தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலை வர்கள் அனைவருக்கும்.
காரணம், தந்தை பெரியார் அவர்கள் திருச்சியைத் தலைநகரமாகக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். எனவே, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரைச்  சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றுவதில் இன்றைய அரசும் பங்குபெறவேண்டும்!
அதுபோலவே, மாநில அரசைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்கிற சட்டத்தை நிறைவேற்றி, அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு - 206 பேர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்து வந்த நிலை யில், இந்த சட்டம் உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை காரணமாக, செயல்படுத் தப்படாமல் முடக்கப்பட்டு இருக்கிறது.
வெளியிலேயே பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொன்ன இன்றைய தமிழக அரசு, இன்னமும் முழு முயற்சி எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இந்தப் பெரியார் பிறந்த நாளில், பெரியா ருடைய படத்திற்கு மாலை சூட்டினால் மட்டும் போதாது; பெரியாருடைய நெஞ் சில் தைத்த முள்ளினை அகற்றுகின்ற பணியில் தமிழக அரசினுடைய பங்கும் உண்டு. அதனை நாங்களும் செய்திருக் கிறோம் என்ற பெருமையை, இந்த அரசும் சேர்த்துப் பெறவேண்டும். அதன் மூலமாக தீண்டாமை, ஜாதிக் கொடுமை, ஜாதி ஒழிய அவர்கள் உதவியதாக ஆகும்.
எனவே, ஜாதி ஒழிய, தீண்டாமை அறவே அழிக்கப்பட, இந்த நாட்டில் மிகத் தேவையான ஒன்றுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கருவறை தீண்டாமையை ஒழிக்கக்கூடிய சிறப்பான இந்த முயற்சி - அதனை இந்தப் பெரியார் பிறந்த நாளிலே செயல்படுத்தவேண்டும்.
குறிப்பாக, மாநில அரசு அதிலே அதிக கவனம் செலுத்தவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இரண்டு சாதகமாக இருக்கின்றன. எல்லாமே தெளிவாக இருக்கிறது. எனவே, இதில் தயக்கம் காட்டக்கூடாது என்பதை வேண்டு கோளாக - பெரியார் பிறந்த நாள் விழா வேண்டுகோளாக மாநில அரசுக்கு வைக்கிறோம். அதுபோல, மத்திய அர சினை சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்திற்காகப் பாராட்டுகின்ற நேரத்திலே, திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் என் கிற கோரிக்கையையும்முன் வைக்கிறோம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக