புதன், 18 செப்டம்பர், 2013

கற்பை விலையாக கேட்டாரா கருப்பசாமி பாண்டியன்? பாலியல் குற்றச்சாட்டு ~ ! கண்ணீருடன் தமிழரசி முறைப்பாடு

திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண், நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் ஒன்றை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரணிடம் செவ்வாய்க்கிழமை காலை கொடுத்துள்ளார்.
அதில், நான் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். எனது தாத்தா மற்றும் தந்தை திமுக வழியில் வந்தவர்கள். கட்சியில் பொறுப்பு கேட்டு தந்தையுடன் சென்று மாவட்டச் செயலாளரை அணுகினேன். அவர் சில நாட்கள் கழித்து தனது உதவியாளர் மூலம் 28.08.2013 அன்று குற்றாலம் வரசொன்னார். நானும் எனது தந்தை நாலடியாரும் குற்றாலத்தில் உள்ள அவரது பங்களாவுக்கு சென்றோம். அங்கே அவரது உதவியாளர் எங்களை மாடியில் மாவட்டச் செயலாளர் இருப்பதாக சொன்னார். எனது தந்தையை கீழே இருக்கச் சொல்லிவிட்டு, என்னை மட்டும் மாடிக்கு அனுப்பினார்கள். அங்கு கருப்புசாமி பாண்டியன் என்னுடைய குடும்ப சூழலை தெரிந்துகொண்டு, என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அழுதுகொண்டே திரும்பிவிட்டேன்.
என்னுடைய தந்தையாரிடம் அங்கு இதுபற்றி சொல்லவில்லை. இதையடுத்து நடந்தவைகளை கட்சி மேலிடத்துக்கு புகார் அனுப்பினேன். இதனிடையே எனக்கு கொலை மிரட்டல் வந்ததால், தென் மண்டல காவல்துறை ஆணையரிடம் நடந்தவைகளை தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படியும், பாதுகாப்பு அளிக்கும்படியும் கோரியுள்ளேன் என்று கூறியுள்ளார்,
இதுதொடர்பான புகார் நெல்லை டி.ஐ.ஜி.யிடம் இருந்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகார் குறித்து தமிழரசியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக கருப்புசாமி பாண்டியன் கருத்தை அறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவருடைய உதவியாளர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தை தொடர்புகொண்டபோது, அங்கே உள்ள மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர் தக்கரை, மாவட்டச் செயலாளர் தற்போது இங்கு இல்லை. மும்பெரும் விழாவுக்காக சென்றுள்ளார். இந்த புகார் மாவட்டச் செயலாளரின் எதிர்தரப்பினரின் சதிவேலை. அவர்களின் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார்கள் என்றார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக