வியாழன், 5 செப்டம்பர், 2013

காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் அழகிகள் ஆட்டம்! செயல் வீராங்கனைகளா?

கிரிக்கெட் போட்டிகளிலேயே சியர்-லீடர்கள் ஆட்டம் போட்டா ஓகே. நம்ம இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த  காங்கிரஸ் கட்சி அதையே கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணி, லோக்கல் அழகிகளை வைத்து ஆட்டம் போட்டால்… இந்த பா.ஜ.க. எதுக்கு குதிக்கிறாய்ங்க? 

“காங்கிரஸ் கட்சி செயல்வீரர் கூட்டத்தில் நடன அழகிகளை நோக்கி ரூபா நோட்டுக்களை வீசி எறிந்த காங்கிரஸ் பிரமுகர், என்ன பதவியில் உள்ளார் என்று சரியாக தெரியவில்லை” என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, “ஒருவேளை அவர் ஏதாவது பதவியில் இருந்தால், காங்கிரஸின் கண்ணியத்தை கெடுத்த அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி செயல்வீரர் கூட்டத்தில் அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்த பிரமுகரின் பெயர், நீரஜ்குமார் ஜா. டில்லி வடமேற்கு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான இவர், டில்லியில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பூர்வாஞ்சல் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதற்காக அந்த தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் செயல்வீரர்கள், மற்றும் பிரமுகர்களை அழைத்து, கிராரி என்ற இடத்தில் செயல்வீரர் கூட்டத்தை நடத்தினார்.
செயல்வீரர்கள் கூட்டம் கிளைமாக்ஸை அடைந்த நிலையில், அந்த மேடையில் சில நடன அழகிகள் தடதடவென ஏறி,ஆபாசமாக நடனம் ஆடத் தொடங்கினர். இதையடுத்து அங்கிருந்த காங்கிரஸார் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களது அதிர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில், பிரமுகர் நீரஜ்குமார் ஜாவும் திடீரென மேடையில் ஏறி அழகிகளுடன் சேர்ந்து நடனமாடினார். பின்னர் தனது பாக்கெட்டில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அழகியின் மீது வீசினார்.
அதன்பின்னர்தான், செயல்விரர் கூட்டத்தில் அரசியல் பேசப்பட்டபின், பிரமுகர் நீரஜ்குமார் ஜா சார்பில் இந்த நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்ற விஷயம் மற்றைய காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவந்தது.
“யார் ஏற்பாடு செய்தாலென்ன.. ஆட்டம் சூப்பர்” என்று கூறியபடி ஆட்டம் முடிந்தபின் கலைந்து சென்றனர் காங்கிரஸ் செயல்வீரர்கள். கட்சிக்கு இப்படி சேவை செய்த வகையில் பிரமுகர் நீரஜ்குமார் ஜாவுக்கு தேர்தலில் கை சின்னத்தில் எப்படியும் சீட்டு கிடைத்துவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் ஆனந்தப்பட்டனர்.
இந்த நிலையில்தான், பாரதீய ஜனதா கட்சியின் டில்லி தலைவர் விஜய்கோயல், இந்த விஷயத்தை போட்டு உடைத்தார். “காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆபாச நடனம் ஆடிய அழகிகள் யார்? அந்த கட்சியின் செயல் வீராங்கனைகளா?” என்று கேள்வி எழுப்பினார்.
விஷயம் வெளியே வந்ததை அடுத்து, அதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டிய கட்டாயம், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் டில்லி மாநில தலைவர் ஜே.பி.அகர்வால், “பிரமுகர் நீரஜ்குமார் ஜா கட்சியின் நிர்வாகி அல்ல. கட்சி சார்பாக கவுன்சிலர் அல்லது வேறு எந்த தேர்தலிலாவது போட்டியிட்டாரா என்பதும் தெரியவில்லை. ஒருவேளை கட்சி சார்பில் அவர் ஏதாவது பதவியில் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவே இல்லை! (நடனம் ஆடிய அழகிகள் காங்கிரஸ் கட்சி செயல் வீராங்கனைகளா என்பதை விளக்கவும் இல்லை)
ஆமா.. கிரிக்கெட் போட்டிகளிலேயே சியர்-லீடர்கள் ஆட்டம் போட்டா ஓகே. நம்ம இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த  காங்கிரஸ் கட்சி அதையே கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணி, லோக்கல் அழகிகளை வைத்து ஆட்டம் போட்டால்… இந்த பா.ஜ.க. எதுக்கு குதிக்கிறாய்ங்க? viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக