திங்கள், 2 செப்டம்பர், 2013

டெல்லி மாணவியின் குடும்பத்தினர் ஆவேசம் : சிறுவனை தூக்கில் போடுங்கள் ! சோனியாவிடம் கோரிக்கை

டெல்லியில், 23 வயது மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கற்பழித்து
கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று, மாணவியின் குடும்பத்தினர் ஆவேசமாக கூறினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், இளம் குற்றவாளிக்கு கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று  தீர்ப்பு கூறப்பட்டது. இளம் குற்றவாளிகள் சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள்தான் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த அளவிலான இந்த தண்டனை மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. தீர்ப்பு கூறப்பட்டதும் அதிருப்தி அடைந்த மாணவியின் தந்தை, இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று தெரிவித்தார். மாணவியின் தாய் மற்றும் தம்பியும் ஆவேசம் அடைந்தனர்.

தூக்கில் போட வேண்டும்
டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டெலிபோனில் பேட்டி அளித்த மாணவியின் தந்தை, ‘‘இளம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட குறைவான தண்டனை முடிவு துரதிர்ஷ்டவசமானது. அது குறித்து வக்கீல்களிடம் கலந்து பேச இருக்கிறோம். அவனை தூக்கில் போட வேண்டும். இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கும் இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். குற்றவாளிகள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
குறைவான தண்டனை திருப்தி அளிக்கவில்லை என்றாலும், தங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் இழக்க வில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டபின், மாணவியின் குடும்பத்தினர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா வதேராவுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது 10 நாட்களுக்குள் அவர்களை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்குவதாக பிரியங்கா அவர்களிடம் உறுதி அளித்தார்.
சோனியா காந்தி
தங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும், மாணவியின் தந்தை தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்குப்பதில் அளித்த அவர், பா.ஜனதா தலைவரும் குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திரமோடியை இன்னும் தான் சந்திக்கவில்லை என்றும், அவர் தங்களை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரி daillythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக