வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நித்தி ரஞ்சிதா விடியோ போலி என்று தீர்ப்பு ! அடடா மிகவும் தெளிவாக இருக்கிறதே ? எது ? விடியோவா ? தீர்ப்பா ?



nithyananda ranjitha Original Video by mnsakthivel

 நித்தியானந்தா- ரஞ்சிதா ‘அந்தரங்கக் காட்சிகள்’ போலியானவை: விஜய் டிவி மன்னிப்பு கேட்க உத்தரவு சென்னை: நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல். கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட விஜய் டிவி நிறுவனம் மீது நடிகை ரஞ்சிதா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தோடு, சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்மையானவை அல்ல, மார்ஃபிங் செய்யப்பட்டவை எனவும் விளக்கம் அளித்திருந்தார். இது குறித்து டிவி தன்னாட்சி ஒழுங்கு முறை அமைப்பின் முன்பு ஆஜராகி ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார் ரஞ்சிதா. இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கவுன்சில் ஸ்டார் விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணையில் அந்த வீடியோ காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் செப்டம்பர் 9ம் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை, மன்னிப்பு கேட்கும் வாசகத்தை ஸ்கிரோல் செய்து ஒளிபரப்ப வேண்டும். புகார்தாரரின் அடிப்படை உரிமைகளை இந்த டிவி நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும், ஒழுங்குமுறை அமைப்பின் விதிகளையும் இந்த டிவி நிறுவனம் அப்பட்டமாக மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  /tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக