வெள்ளி, 6 செப்டம்பர், 2013

60 லட்சம் கோடி தோரியம் ஊழல் ! இதுதான் இந்தியாவிலேயே மிக பெரும் ஊழல் குற்ற சாட்டு !

இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. தோரியம் கடத்தல் குறித்தும் ரஞ்சன் சகாய் முறைகேடு குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.


தோரியம் கடத்தலால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கதிர்வீச்சு தன்மையுள்ள இந்த பொருட்கள் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால் பெரும் நாச வேலைகளுக்கு காரணமாகிவிடும் என்ற நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கவலை அளிப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனdinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக