திங்கள், 26 ஆகஸ்ட், 2013

Khushboo: ரம்யாவின் வெற்றி சில ஆண்களுக்கு பொளேர்னு இருக்கிறது! சபாஷ் ! குஷ்பூ மாம் எங்கே அடிக்கிறீர்கள் என்று புரிகிறது good

சென்னை: நடிகை ரம்யா லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி தருகிறது. இது, அவர் குறித்து கீழ்த்தரமாக கேள்விகளை கேட்ட சில ஆண்களின் முகத்தில் விழுந்த அடியாகும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குத்து ரம்யா கர்நாடக லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸில் பல காலம் உள்ள ரம்யா இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்துள்ளார். இந்நிலையில் ரம்யாவின் வெற்றி குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நடிகை ரம்யா லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி தருகிறது. இது, அவர் குறித்து கீழ்த்தரமாக கேள்விகளை கேட்ட சில ஆண்களின் முகத்தில் விழுந்த அடியாகும். பெண்கள் அரசியலுக்கு வந்து பெண்கள் மரியாதை மற்றும் கௌரவத்துடன் வாழ சிறந்த சமூகம் கிடைக்க போராட வேண்டும். இதை ரம்யா துவங்கியதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக