திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மகனுடன் பழகியதால் தலித் சிறுவனை கத்தியால் குத்திய ஜாதிதந்தை

மகனுடன் நட்பாக பழகியதால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரையைச் சேர்ந்த அந்த சிறுவன், தனியார் பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவனும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற சிறுவனும் நண்பர்களாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கார்த்தியிடம் தலித் சிறுவன் தொடர்ந்து பேசிவந்ததால், ஆத்திரமடைந்த கார்த்தியின் தந்தை மணி, கடந்த 21ஆம் தேதி, தலித் சிறுவனை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்தக் காயமடைந்த அந்த சிறுவன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது கை, கன்னம், காது உள்ளிட்ட 30 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அலங்காநல்லூர் காவல்நிலைய காவலர்கள் மீது, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, தமது மகளை தலித் சிறுவன் கேலி செய்ததாக மணி தரப்பில் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள் webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக