சனி, 17 ஆகஸ்ட், 2013

DMK mla ஜே .அன்பழகன் காட்டம் ! சரத்குமாரால் ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு அபாயின்ட்மென்ட் கூட வாங்கிதரமுடியாதா ?

சரத்குமாரால் விஜய்க்கு ஜெ.விடம் ஒரு அபாயின்ட்மென்ட் கூட வாங்கித் தர முடியாதா?: அன்பழகன்  சரத்குமார் முதல்வர் ஜெயலலிதாவின் வலது கரமாக இருந்தும் அவரால் விஜய்க்கு ஒரு அபாயின்ட்மென்ட் வாங்கித் தர முடியாதா என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் விரும்பினால் தனது தயாரிப்பு நிறுவனமான அன்பு பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் மேலும் கூறியிருப்பதாவது, தலைவா விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஏன் அமைதி காக்கிறார்?. நடிகர் சங்கத் தலைவராக இருந்தும், முதல்வரின் வலது கையாக செயல்பட்டும் அவரால் விஜய் முதல்வரை சந்திக்க ஒரு அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்க முடியாதா?. நடிகர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறி, மற்றொருவர் பதவியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தலைவா விவகாரத்தில் விஜய்க்கு உதவி செய்து வருவதாக சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக