சனி, 17 ஆகஸ்ட், 2013

சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு கடும் நெஞ்சுவலி ! அம்மாவின் புகழ் பாடிய ரஜனி வகையறா எங்கே போய்விட்டார்கள் ?

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி சென்னை: தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலியால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் நடித்துள்ள தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படத்தை வெளியிட உதவி செய்யக் கோரி நடிகர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை வெளியிட உதவி செய்யுங்கள், இல்லை என்றால் நான் கடனாளியாகிவிடுவேன் என்று ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டடார். பின்னர் படத்தை ரிலீஸ் செய்யக்கோரி படக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நேற்று மாலை அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஜெயினுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தலைவா பட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக