ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

துர்கா IAS க்கு நியாயம் கேட்கும் சோனியா கெம்கா IAS க்கும் நியாயம் கேட்டு கடிதம் எழுத வேண்டியது தானே?

லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தர
பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்.
அதிகாரி துர்கா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது சமாஜ்வாடி கட்சியை எரிச்சல் அடையச் செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ப்ரொபேஷனரி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிபவர் துர்கா சக்தி நாக்பால்(28). மணல் கடத்தும் கும்பலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனால் அவர் ஆளும் சமாஜ்வாடி கட்சியினரின் விரோதத்தை சம்பாதித்தார். இந்நிலையில் ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தல கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தில் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துர்காவுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் சமாஜ்வாடி கட்சி தனது நிலையை மாற்றுவதாக இல்லை. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், சோனியா காந்தி மேலும் 2 கடிதங்களை எழுத வேண்டும். சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் நிலமோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ராப்ர்ட் வாத்ரா தொடர்பான விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்தும் அவர் கடிதம் எழுத வேண்டும் என்று தெரிவித்தார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக