ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

சிம்புவுடன் நடிக்காதே! சமந்தாவுக்கு சித்தார்த் வேண்டுகோள்

சென்னை:‘சிம்புவுடன் நடிக்க வேண்டாம் என சமந்தாவுக்கு சித்தார்த்
கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.சித்தார்த், சமந்தா ஜோடி காதல் வலையில் விழுந்திருப்பதும், ஜோடியாக விழாக்கள், கோயில்களுக்கு செல்வதும் இண்டஸ்ட்ரிகாரர்களுக்கு வெட்ட வெளிச்சம். இவர்களின் நெருக்கம் அம்பலமானதால் சமந்தாவுக்கான பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதையடுத்து சமந்தாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் பிறகுதான் காதல், கல்யாணம் என்ற பாணியில் பேட்டி அளித்தார். இதையடுத்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு ஜோடி தேடும் பணி தொடங்கியது. சமந்தாவை ஜோடி சேர்க்க இயக்குனர் யோசித்தார். பட நிறுவனம் சார்பில் சமந்தாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. இதையறிந்த சித்தார்த் சமந்தாவுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம். ‘யாருடன் ஜோடியாக நடித்தாலும் பரவாயில்லை சிம்புவுடன் மட்டும் நடிக்க வேண்டாம் என்றாராம். இதையடுத்து சமந்தா தன்னிடம் கால்ஷீட் இல்லை என்று சொல்லி சிம்பு பட வாய்ப்பை தவிர்த்து விட்டாராம். ‘அவர் இல்லாவிட்டால் என்ன, ஹன்சிகா இருக்கிறார். சிம்புவுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிப்பதால் அவரையே இதிலும் ஜோடியாக்கிவிட வேண்டியதுதானே என்று பாண்டிராஜுக்கு சிலர் ஐடியா தந்தார்களாம். ஆனால் ஒரே ஜோடி தொடர்ந்து பல படங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என படக்குழு யோசிக்கிறதாம். இதனால் அமலா பாலுக்கு லக் அடிக்கும் என பட யூனிட்டார் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக